3 கோடி ரூபா செலவில் நற்பிட்டிமுனை விளையாட்டு மைதான அபிவிருத்தி பணிகள் பூர்த்தி..!

அஸ்லம் எஸ்.மௌலானா-
ல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வர்- சடடமுதுமாணி எம்.நிஸாம் காரியப்பர் அவர்களின் கருத்திட்டத்தில் மாநகர சபையின் சுமார் மூன்று கோடி ரூபா செலவில் மேற்கொள்ளப்பட்டு வந்த நற்பிட்டிமுனை அஷ்ரப் விளையாட்டு மைதானத்தின் முதற்கட்ட அபிவிருத்தி பணிகள் பூர்த்தியடைந்துள்ளன.

நேற்று முன்தினம் புதன்கிழமை (06) அங்கு நோன்பு பெருநாள் தொழுகை நடத்தப்பட்டு, அம்மைதானம் பொது மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த மைதான அபிவிருத்திக்கு நற்பிட்டிமுனையை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் மாநகர சபை உறுப்பினர்களான எம்.எம்.சாலிதீன், ஏ.எச்.எச்.எம்.நபார், சீ.எம்.முபீத் ஆகியோருடன் ஜூம்ஆப் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் மற்றும் பாடசாலை சமூகத்தினர் முழுமையான ஒத்துழைப்பு வழங்கியதுடன் முன்னாள் மாநகர சபை உறுப்பினர்களான எம்.எல்.சாலிதீன், ஏ.எச்.எச்.எம்.நபார் ஆகியோர் வெயில், மழை, இரவு, பகல் பாராமல் இந்த அபிவிருத்தி வேலைகளை நேரடியாக கண்காணித்து, துரிதப்படுத்துவதில் முழுமூச்சுடன் உழைத்து வந்துள்ளனர்.

அதேவேளை மாநகர சபையின் ஆணையாளர் ஜே.லியாகத் அலி, பொறியியலாளர் எம்.சர்வானந்தன், முன்னாள் சிரேஷ்ட வேலைகள் அத்தியட்சகர் எம்.ஐ.ஏ.மஜீத், முன்னாள் கணக்காளர் எச்.எம்.எம்.ரஷீத், தற்போதைய கணக்காளர் எம்.எம்.தஸ்தீக், முன்னாள் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சி.எம்.மாஹிர் போன்றோர் இதற்காக நிர்வாக மட்டத்தில் மிகவும் கரிசனையுடன் பெரும்பங்காற்றி வந்துள்ளனர்.

விளையாட்டு வீரர்களின் பயன்பாட்டுக்கு எந்த வகையிலும் உதவாமல் அதேவேளை மழை காலங்களில் குளமாக மாறுகின்ற இந்த மைதானத்தின் அபிவிருத்திக்காக மாநகர சபையின் ஐம்பது இலட்சம் ரூபா செலவில் 3336 கியூப் மண் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன் கனரக இயந்திரங்கள், எரிபொருள் மற்றும் இதர சேவைகளுக்காக இரண்டரை கோடி ரூபா செலவாகியிருக்கிறது.

இறுதியாக முன்னாள் மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பர், ஆணையாளர் லியாகத் அலி, உள்ளூராட்சி உதவியாளர் எம்.எம்.சர்ஜூன் ஆகியோரின் அயராத முயற்சியினால் சுகாதாரத்துறை மேம்பாட்டு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாண சபையின் பத்து இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் இறுதிக்கட்ட வேலைகள் முன்னெடுக்கப்பட்டு, நிறைவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட், செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ், உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர்.

இவ்வேலை திட்டத்தின் பயனாக இம்மைதானம் நான்கரை அடி உயர்த்தப்பட்டு, மிகவும் நேர்த்தியாக செப்பனிடப்பட்டு, விளையாட்டுத்துறைக்கு ஏற்ற வகையில் புனரமைப்பு செய்யப்பட்டு, இன்று மிகவும் புதுப்பொலிவுடன் ரம்மியமாக காட்சியளிக்கிறது.

இது ஒரு வித்தியாசமான அபிவிருத்தி திட்டமாகும். அதாவது கடந்த இரு வருட காலமாக கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்பட்டு வந்த குப்பை, கூளங்கள், இம்மைதானத்தில் கொட்டப்பட்டு, அதன் மேல் உடனுக்குடன் மண்ணிட்டு செப்பனிடப்பட்டு, அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன்போது மாநகர முதல்வர் மற்றும் நற்பிட்டிமுனையை சேர்ந்த மாநகர சபை உறுப்பினர்களுடன் அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட சில தீய சக்திகள் இத்திட்டத்தை சீர்குலைப்பதற்காக இம்மைதானத்தில் கொட்டப்பட்டிருந்த குப்பைகளுக்கு தீ வைத்து, சூழலுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி, மக்களை தூண்டிவிடும் சதி நடவடிக்கைகளை இரண்டு தடவைகள் அரஙகேற்றியிருந்தனர். ஊடகங்களிலும் போலி விமர்சனங்களை கட்டவிழ்த்து விட்டிருந்தனர்.

எனினும் அது குறித்து பள்ளிவாசல் ஜமாத்தினர், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட பொது மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டதனால் அவர்கள் சதிகாரர்களின் வலைக்குள் சிக்காமல், உண்மையை உணர்ந்து தொடர்ந்தும் இத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்.

அதேவேளை மழை காலங்களில் இந்த அபிவிருத்தி திட்டத்தை முன்னெடுப்பது பெரும் சவாலாக அமைந்திருந்தது.

எவ்வாறாயினும் எத்தகைய சதிகள், சவால்கள் எழுந்தாலும் இத்திட்டம் ஒருபோதும் கைவிடப்பட மாட்டாது என்பதுடன் தனது பதவி காலத்தினுள் அதனை பூர்த்தி செய்து, ஒரு செம்மையான விளையாட்டு மைதானமாக மக்களிடம் கையளித்து விட்டே வீடு செல்வேன் என்று பல தடவைகள் சத்திய வாக்குறுதியளித்தவாறு முன்னாள் முதல்வர் நிஸாம் காரியப்பர் அத்திட்டத்தை மிகவும் வெற்றிகரமாக நிறைவு செய்து கொடுத்துள்ளார்.

அத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் நிஸாம் காரியப்பர் விடுத்த வேண்டுகோளின் பேரில் இம்மைதானத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்திக்காக நகர திட்டமிடல் அமைச்சு ஒரு கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

நற்பிட்டிமுனையின் நீண்ட கால தேவையாக இருந்து வந்த விளையாட்டு மைதானத்தை மிகவும் சவால் நிறைந்த ஒரு வேலைத் திட்டத்தின் ஊடாக நிறைவேற்றித் தந்துள்ள முன்னாள் முதல்வர் நிஸாம் காரியப்பர் அவர்களுக்கு இந்த ஊர் மக்கள் சார்பாக நன்றிப் பூக்களை காணிக்கையாக செலுத்துகின்றோம் என மாநகர சபை உறுப்பினர்களான எம்.எல்.சாலிதீன், ஏ.எச்.எச்.எம்.நபார் ஆகியோர் தெரிவிக்கின்றனர்.

முதல்வரின் ஆலோசனைகள், வழிகாடடல்களுக்கு ஏற்ப அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பக்க துணையாக செயற்பட்ட மாநகர சபையின் ஆணையாளர் ஜே.லியாகத் அலி, பொறியியலாளர் எம்.சர்வானந்தன் ஆகியோருக்கும் நன்றிகளை தெரிவிப்பதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

அத்துடன் பெக்கோ இயந்திர சாரதிகளான அமலன், ரூபன், காவலாளி கே.அப்துல் கபூர் உள்ளிடட பல ஊழியர்களின் இரவு, பகல் பாராத அர்ப்பணிப்பு மிக்க சேவைகளை இந்த சந்தர்ப்பத்தில் பாராட்டுவதாகவும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர். 


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -