உறவுகளை நினைத்து உணர்வுடன் 27வது வீர மக்கள் தின நிகழ்வுகள்...!

புளொட் அமைப்பின் 27வது வீர மக்கள் தின நிகழ்வுகள் இன்று 13.06.2016 அன்று காலை வவுனியா, கோவில்குளத்தில் அமைந்துள்ள தோழர் க.உமாமகேஸ்வரன் இல்லத்தில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் உப தலைவர்களில் ஒருவரும் முன்னாள் உப நகர பிதாவுமாகிய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. .

நினைவில்லத்தில் உள்ள கழகத்தின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. நிகழ்வுகளுக்கு வருகை தந்திருந்த அதிதிகள், அங்கு வைக்கப்பட்டிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் மறைந்த செயலாளர் நாயகம் அ.அமிர்தலிங்கத்தினதும், கழகத்தின் மறைந்த செயலதிபர் தோழர் க.உமாமகேஸ்வரனினதும் உருவப்படங்களுக்கு மலர் மாலைகள் அணிவித்தனர். அத்துடன் நிகழ்வுகளுக்கு வருகை தந்திருந்த கழக உறுப்பினர்கள் ஆதரவாளர்களால் மலரஞ்சலி செலுத்தப்பட்டது. 

இந் நிகழ்வில் இறைபணிச் செம்மல் செ.வை.தேவராசா(கண்ணகி), சுத்தானந்த இந்து இளைஞர் மன்றத் தலைவர் திரு நா.சேனாதிராசா, கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் திரு கு.ரவீந்திரநாதன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் செயற்குழு உறுப்பினரும், வட மாகாண சபை உறுப்பினருமான திரு ஜி.ரி.லிங்கநாதன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் உப தலைவர்களில் ஒருவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான திரு வை.பாலச்சந்திரன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளர் திரு த.யோகராஜா, மற்றும் செயற்குழு உறுப்பினர்களான திரு. குகதாசன், திரு சு.காண்டீபன், மாவட்ட செயற்குழு நிதி பொறுப்பாளர் நிசாந்தன், மாவட்ட குழு உறுப்பினர்களான ஆட்டோ சங்கத் தலைவர் ரவி, மூர்த்தி ஆகியோருடன் கழக உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -