பா.திருஞானம்-
கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில் நுவரெலியா மாவட்டத்தில் 2015 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக் கொண்ட 644 மாணவர்களுக்கான சான்றிதழ்களும் பதக்கமும் வழங்கும் நிகழ்வு இன்று (25) கல்வி இராஜாங்க அமைச்சின் ஏற்பாட்டில் எல்.அய்.சீ (LIC) காப்புறுதி நிறுவனத்தின் அனுசரணையுடன் நுவரெலியா மாவட்டத்தில் 2015 ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 5 ஏ சித்திகளுக்கு மேல் பெற்றுக் கொண்ட மாணவர்களுக்கான இந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று (25.06.2016) காலை 8.30 மணிமுதல் நுவரெலியா சினிசிட்டா மண்டபத்தில் நடைபெற்றது
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் கலந்து கொண்டார்.
இவருடன் நுவரெலியா மாநகர சபையின் முதல்வர் மகிந்த தொடம்பே கமகே,எமது எல்.அய்.சீ காப்புறுதி (டுஐஊ) நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி ஜே.சென்,பொது முகாமையாளர் அரவிந்தர் சிங் மற்றும் பாராளுமன்ற மாகாண சபை உறுப்பினர்களும் கல்வி அதிகாரிகள் பாடசாலை அதிபர்கள் மாணவர்களும் கலந்து கொள்கின்றனர்.
மாணவர்களை ஊக்குவிக்கின்ற அதேவேளை 91 பாடசாலை அதிபர்களுக்கும் விசேட விருதுகள் வழங்கப்பட்டன. அதே நேரத்தில் கல்வி வலயங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.