கண்டி பள்ளிவாயல் மினாரா விவகாரம் -மகிந்த அரசைக் கடிந்தோர் MY3 அரசை என்ன சொல்வர் -முபாறக்

எஸ்.அஷ்ரப்கான்-

க‌ன்டி ப‌ள்ளிவாயலின் மினாராவைக்க‌ட்ட‌ விடாம‌ல் இன‌வாதிக‌ள் செய்த‌ ஆர்ப்பாட்ட‌த்தை அர‌சு உல்லாச‌மாக‌ பார்த்துக்கொண்டிருந்த‌தை உல‌மா க‌ட்சி வ‌ன்மையாக‌ க‌ண்டித்துள்ள‌து.

இன்று (06) வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கண்டி நகர மத்தியில் அமைந்துள்ள ஜும்ஆப் பள்ளிவாசல் முன்னால் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிகின்றன.
குறித்த பள்ளிவாசலின் புனர்நிர்மாணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பள்ளிவாசலின் “மினரா” கட்டுமானப் பணிகள் நடைபெற்றால், கண்டி நகரில் அமைந்துள்ள பௌத்தர்களின் புனித தளமான தலதா மாளிகையை விட அது உயரமாக அமையும் எனத் தெரிவித்து கடும்போக்கு பெளத்த அமைப்புக்கள் சில பள்ளிவாசல் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன‌ர். .

தலதா மாளிகையின் கௌரவத்தை கருத்தில் கொண்டு கண்டி புனித பூமி வளாகத்தில் அமைக்கப்படும் கட்டடங்கள் அனைத்தும் தலதா மாளிகையை விட உயரம் குறைவாகவே நிர்மாணிக்கப்படவேண்டும் என பாரம்பரிய சட்டம் காணப்படும் சந்தர்ப்பத்தில், கடும் போக்கு முஸ்லிம்கள் சிலர் அதற்கு எதிராக இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
என்றாலும் குறித்த பள்ளிவாசலின் “மினரா” கட்டப்பட்டாலும் அது தலதா மாளிகையை விட உயரமாக அமையாது என பள்ளிவாசல் நிர்வாக சபையினர் தெரிவித்துள்ளனர். அதேவேளை எதிர்ப்புக்கள் காரணமாக “மினரா” கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையிலேயே கடும்போக்கு பெளத்த அமைப்புக்கள் சில பள்ளிவாசலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்து இன‌வாதிக‌ள் வெற்றி பெற்றுள்ள‌ன‌ர். க‌ட‌ந்த‌ ம‌ஹிந்த‌ ஆட்சியில் இவ்வாறான‌ செய‌ல்க‌ள் ந‌ட‌ந்த‌ போது ஆட்சியாள‌ரே பொறுப்பு என‌ சொன்ன‌ முஸ்லிம் ச‌மூக‌ம் இந்த‌ ஆட்சியில் இவை ந‌ட‌ப்ப‌தைப்பார்த்து மௌன‌மாக‌ இருக்கிற‌து. ஆனாலும் உல‌மா க‌ட்சி இத‌னை வன்மையாக‌ க‌ண்டிப்ப‌துட‌ன் ஜ‌னாதிப‌தியும் பிர‌த‌ம‌ரும் த‌லையிட்டு க‌ன்டி முஸ்லிம்க‌ளின் உரிமையை பெற்றுக்கொடுக்க‌ வேண்டும் என‌ கேட்டுக்கொள்கிற‌து என‌ உல‌மா க‌ட்சி த‌லைவ‌ர் க‌லாநிதி முபாற‌க் மௌல‌வி தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -