க.கிஷாந்தன்-
மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையிலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
தூக்கில் தொங்கிய நிலையில் 07.06.2016 அன்று இரவு 11.45 மணியளவில் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
மஸ்கெலியா பிரவுண்ஸ்வீக் தோட்டத்தை சேர்ந்த 49 வயது மதிக்கதக்க செல்வசுந்தரம் என்ற நபரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
இவர் சுகயீனம் காரணமாக 07.06.2016 அன்று மாலை சிகிச்சைக்கென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
சடலம் மீதான ஆரம்பகட்ட நீதவான் விசாரணைகள் மேற்கொண்ட பின் பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். எனினும் தூக்கிட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
இச்சம்பவம் தொடர்பாக மஸ்கெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.