எப்.முபாரக்-
திருகோணமலை சேருநுவரப் பிரதேசத்தில் இரண்டு மாடுகளைத் திருடிய இருவரை செவ்வாய்கிழமை (7) மாலையில் கைது செய்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்கள் இருவரும் வான்எல பகுதியைச் சேர்ந்த 48 மற்றும் 38 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சேருநுவர பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரின் இரண்டு மாடுகள் திருடப்பட்டுள்ளதாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர்கள் இருவரை கைது செய்துள்ளதாகவும் குறித்த இரு சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு இன்று புதன்கிழமை (8)மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் சேருநுவர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.