உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடாத்த தயார் - மஹிந்த தேசப்பிரிய

ந்த சந்தர்ப்பத்திலும் உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்த தயார் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்

எந்த சந்தர்ப்பத்திலும் தேர்தல் ஆணைக்குழுவினால் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்படவில்லை எனவும். குறிப்பிட்ட உள்ளுராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கை உள்ளுராட்சி மற்றும் மாகாண சபை அமைச்சரினால் எமக்கு உறுதியாக, வழங்கப்படும் வரை தேர்தலை நடத்துவதில் நெருக்கடி நிலை உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கம்பளை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற பேரணி நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இதனை தெரிவித்தார்.

உங்கள் பெயர்களை தேர்தல் வாக்காளர் பெயர் பட்டியலில் தாமதிக்காது உள்ளீடு செய்யுங்கள்’ என்ற தொனிப்பொருளில் இந்த பேரணி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -