தன் நண்பியுடன் இரகசிய காதல் தொடர்பைப் பேணிய தனது கணவரின் ஆணுப்பை வெட்டிய மனைவி-படங்கள்

தனது உயிர் நண்பியுடன் இரகசிய காதல் தொடர்பைப் பேணிய தனது கணவர் தனக்குத் துரோகம் செய்திருப்பதை கண்டறிந்து சினமடைந்த மனைவி, அவரது ஆணுறுப்பை மரத்தை வெட்டப் பயன்படுத்தப்படும் உபகரணத்தால் வெட்டித் துண்டித்த விபரீத சம்பவம் தாய்லாந்தில் இடம்பெற்றுள்ளது.

சுற்றுலா ஸ்தலமான பட்டயாவில் பொரித்த கோழி இறைச்சியை விற்பதை தொழிலாகக் கொண்ட குறித்த மனைவி, தனக்குத் துரோகம் செய்த தனது கணவரை பழிதீர்க்க சம்பவ தினம் அவருடன் காதல் சரசத்தில் ஈடுபடுவதாக பாசாங்கு செய்து அவரது காற்சட்டையை கழற்ற ஊக்குவித்துள்ளார்.



தொடர்ந்து அவர் சிறிதும் எதிர்பாராத வகையில் தயாராக வைத்திருந்த மரம் வெட்டும் உபகரணத்தால் அவரது ஆணுறுப்பைத் துண்டித்துள்ளார்.

இதனால் வலி தாங்காது துடித்த சொம்சாய் என சுருக்கப் பெயரால் அழைக்கப்படும் குறித்த கணவர், வலியைத் தணிவிக்க வெட்டப்பட்டு குருதி பெருக்கெடுத்தோடிய ஆணுறுப்பு பகுதியில் பனிக்கட்டியை கொண்ட பையை அழுத்திப் பிடித்தவாறு வீதியில் இறங்கி உதவி கோரி கூச்சலிட்டுள்ளார்.

இந்நிலையில் கணவர் வேதனையால் துடிப்பதைப் பொறுக்க முடியாது மனம் இளகிய மனைவி, அம்புலன்ஸ் வண்டிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தொடர்ந்து அவர் அம்புலன்ஸ் வண்டியில் தனது கணவர் சகிதம் பட்டயா நகரிலுள்ள பாங் லமுங் மருத்துவமனைக்கு சென்றார்.

அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சொம்சாயிக்கு அவரது உறுப்பு
பெருமளவில் வெட்டப்பட்டு முழுமையாக துண்டிக்கப்படும் நிலையில் காணப்பட்ட ஆணுறுப்பை மீளப் பொருத்த அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து சொம்சாயிடம் விசாரணைகளை மேற்கொள்ள அவர் குணமாகும் வரை பொலிஸார் காத்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.வீரகேசரி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -