பைரூஸ்-
ஓட்டமாவடி தாருஸ்ஸலாம் கலாபீடத்தில் கல்வி பயிலும் ஓட்டமாவடி-3 ம் வட்டாரத்தைச் சேர்ந்த இரண்டாம் வருட மாணவன் முஹம்மது றிபாஸ் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ஓட்டமாவடி தாருஸ்ஸலாம் கலாபீடத்தில் கல்வி பயிலும் ஓட்டமாவடி-3 ம் வட்டாரத்தைச் சேர்ந்த இரண்டாம் வருட மாணவன் முஹம்மது றிபாஸ் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ரமழான் கால விடுமுறைக்காக வீடு வந்த இவர், நண்பர்களுடன் சேர்ந்து உன்னிச்சைக் குளத்தில் குளிக்கச்சென்ற வேளை நேற்று காலை (25) நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார். ஜனாஸா தற்போது கரடியனாறு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவரது பெற்றோர்கள் வெளிநாட்டில் வசிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் உம்ரா கடமையை நிறைவேற்றியதுடன், அங்கே தனது பெற்றோரைச் சந்தித்து விட்டு வந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. தாருஸ்ஸலாம் கலாபீடத்தில் இரண்டாவது வருடத்தில் கல்வி கற்ற இவர், ஒரு ஹாபிழ் என்பதும் குறிப்பிடத்தக்கது.