அப்துல்சலாம் யாசீம்-
மோட்டார் சக்கிலில் பின் சீட்டில் பெண்கள் ஒருபக்கமாக இருகால்களையும் வைத்துப் பயணிப்பதற்கு பயணிகளுக்கு அனுமதியளிக்குமாறு திருகோணமலை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் திருகோணமலை மாவட்ட ஊடகவியளாளர்கள் கோரிக்கையினை முன் வைத்தனர்.
திருகோணமலை மாவட்டத்திற்கு அண்மையில் நியமிக்கப்பட்டுள்ள சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஏ.ஜி.சரத் சந்திர குமார அவர்களுக்கும் திருகோணமலை மாவட்ட ஊடகவியளாளர்களுக்குமிடையிலான சினேகபுர்வமான சந்திப்பொன்று நேற்று (25) காலை 10.30 மணியளவில் திருகோணமலை துறைமுக வீதியிலுள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்றபோதே ஊடகவியளாளர்கள் இக்கோரிக்கையினை முன்வைத்தனர்.
அரச , தனியார் அலுவலகங்களில் தொழில்புரியும் மற்றும் வேறு தேவைகளுக்காக மோட்டார் சைக்கிலில் பெண்கள் பின் அமர்வில் பயணித்து வருகின்றனர். நீண்ட காலமாக மோட்டர் சைக்கிலில் பின் அமர்வில் பயணிக்கும் பெண்கள் ஒரு பக்கமாக இரு கால்களை வைத்தே பயணித்து வந்துள்ளனர். அண்மைக் காலமாக பொலிஸ் போக்கு வரத்துப் பிரிவினரினால் இதற்கான தடை விதிக்கப்பட்டதுடன் அதனை மீறுபவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வந்துள்ளன.
பெண்கள் இரு கால்களையும் இரு பக்கமும் வைத்துக் கொண்டு பயணிப்பதில் பல விதமான கஸ்டங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதனால் இந்நடைமுறையினை நீக்கி கடந்த காலங்களைப் போன்று ஒருபுறம் இரு கால்களையும் வைத்துப் பெண்கள் மோட்டார் சைக்கிலில் பயணிப்பதற்கான அனுமதியினைத் வழங்குமாறு ஊடாகவியளாளர்கள் புதிதாக திருகோணமலை மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள ஏ.ஜி.சரத் சந்திரகுமார அவர்களிடம் கோரிக்கையினை முன்வைத்தனர்.