இறக்காமம் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

எஸ்.எம்.சன்சீர் (இறக்காம் செய்தியாளர்)-

ம்பாரை சர்வோதய (EU SDDP/ Unicef) மற்றும் சுகாதார திணைக்களமும் இணைந்து நடாத்திய சிறுவர் துஷ்பிரயோகம், இளம்வயது திருமணம், போசாக்கின்மை சம்மந்தமான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நேற்று (25) காலை இறக்காம சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் சுகாதார வைத்திய அதிகாரி னுச.ஐ.டு.ஆ.றஸீன் தலைமையில் இடம்பெற்றன.

இன்நிகழ்வின்போது தாய் சேய் நலன் திட்ட அதிகாரி வைத்தியர் எம்.ஏ.சீ.எம் பஸால் வளவாளராக கலந்து கொண்டார் மற்றும் இறக்காம பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயசலாளர்  எப். நஜீஹா முஸபீர் மற்றும்  பீ.எஸ்.றேகா(மாவட்ட திட்ட இணைப்பாளர்) தாய் சேய் சுகாதார நலன்திட்டம் அம்பாரை சர்வோதய, (EU SDDP/ Unicef) ரீ.பரீஹா பேகம் (கள சுகாதார அழகு படுத்துனர்) சர்வோதய(EU SDDP/ Unicef)அம்பாரை கிராம உத்தியோகஸ்தர்கள் சமூக தலைவர்கள்இமற்றும் மார்க்க அறிஞ்ஞர்களும் கலந்து கொண்ட இந்நிகள்வானது மக்கள் தொடர்புடைய முக்கிய பிரமுகர்களைக்கொண்டே இந்நிகள்வு நடைபெற்றது.

இதன்போது உரை நிகழ்த்திய தாய் சேய் நலன் திட்ட அதிகாரி வைத்தியர் பஸால் தெரிவிக்கையில் இலங்கையில் 8% ஆண் குளந்தைகளும் 2% பெண் குளந்தைகளும் சிறுவர் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியுள்ளதாக அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளதாகவும் தெரிவித்தார்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -