குறை கூறுபவர்கள் கூறட்டும் இறைவன் அவர்களை பார்த்துக்கொள்வான் - ரிப்கான் பதியுதீன்

எஸ்.என்.எஸ்.றிஸ்லி-
ன்று முகநூல் மற்றும் இணையங்களில் பரவால பதிவேற்றம் செய்யப்படும் விடயம் ஒருவரை ஒருவர் குறை கூறி மக்களிடையே வீண் குழப்பங்களை ஏற்படுத்தும் விதமாகவே அனைத்து செய்திகளும் அமைகின்றது.

இது ரமழான் மாதம் இம் மாதம் முஸ்லீம் சமூகத்திற்கு ஒரு முக்கியமான மாதம் இஸ்லாமியர்களின் அடையாளமான புனித அல் குர் ஆன் இறக்கப்பட்ட மாதம் இம் மாதத்தில் நாம் இறைவனிடத்தில் மன்றாடி நம் பாவங்களுக்கு மன்னிப்பு கேற்க வேண்டிய காலமே தவிர பாவங்களை சேர்க்க வேண்டிய காலம் அல்ல.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்கள் எனது சகோதரர் அவர்மீது இந்த நோன்பு காலங்களில் வழங்கப்படும் ஈத்தம் பலம் பற்றி மற்றைய கட்சியில் உள்ளவர்கள் பலவாறு சிமர்சனம் செய்தார்கள். ஆனால் அந்த இறைவனுக்குத் தெரியும் பழத்தினை பெற்றுக்கொண்ட மக்களுக்கும் தெரியும் அமைச்சர் வழங்கிய பழம் எந்த ஒரு குறையும் இன்றி தரமான ஒன்று என்று.

குறை கூறுபவர்கள் கூறட்டும் இறைவன் அவர்களை பார்த்துக்கொள்வான் அவர்களுக்கான கூலியை வழங்குவான் நோன்பாளிகளின் சிந்தனையில் குழப்பங்களை உண்டாக்கும் முனாபிக்கீங்களின் செயலை போன்று நாமும் செய்யக் கூடாது .

அமல்களின் மாதம் இது பிறரை பற்றி பேசி எமது ஏட்டில் பாவங்களை நாம் எழுத வைக்க வேண்டாம் குறை உள்ளவர்கள் குறைத்துக்கொண்டு திரியட்டும் எம் மீது தவறுகள் இல்லை அதனால் அவர்களுக்கு பதில் கொடுக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை ஆயினும் எமக்கெதிராக அவதூறு பேசித்திரியும் அனைவருக்கும் அழிவு நிச்சயம் காத்திருக்கின்றது இறைவன் இருப்பதை மறந்து செயல்படுகின்றார்கள்.

ஆனால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போராளிகள் ஒரு வார்த்தை என்றாலும் உண்மையை மட்டும் உங்கள் முகநூளிலோ அல்லது இணையங்கலிலோ பதிவு செயுங்கள். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்சின் உண்மைக் கொள்கையை இனியாவது அனைவரும் புரிந்துகொள்ளட்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -