கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் அழைப்பினையேற்று 2016.06.10ஆந்திகதி வெள்ளிக்கிழமை (இன்று) கிழக்கு மாகாணத்திற்கு திடீர் விஜயமொன்றினை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்டிருந்தார்.
பின்னர் முதலமைச்சர் காரியாலயத்தில் பிரதமருக்கு ஏற்பாடு செய்யபட்டிருந்த சிற்றுண்டி நிகழ்வில் முதலமைச்சர் உட்பட மாகாண அமைச்சர்கள் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
பின்னர் வரவேற்புரை நிகழ்த்துவதற்காக மாகாண அமைச்சர் ஆரியவதியும் சபை தொடர்பாக பேசுவதற்கு சபைத்தலைவர் கலப்பதி, தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்பாக பிரதி தவிசாளர் பிரசன்னா, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் குழுத் தலைவருமான ஆர்.எம். அன்வர் ஆகியோர் பிரதமரிடம் மக்கள் பிரச்சினைகள் தொடர்பாக தெளிவுபடுத்தினர்
தொடர்ந்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் பிரதமரிடம் பேசுகையில் சில கோரிக்கைகளை முன்வைத்தார்.
வடக்கு கிழக்கில் யுத்தம் முடிவடைந்த நிலையில் நாட்டில் ஒரு நல்லாட்சி தங்களது தலைமையில் ஏற்படுத்தப்பட்ட நிலையிலும் இன்னும் சில பிரச்சினைகள் இருந்து கொண்டு வருகின்றன. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் தொடரும் காணிப்பிரச்சினைகள் முடிவுக்கு கொண்டு வரப்படாத நிலையில் படையினர் பொதுமக்களின் காணிகளை இன்னும் ஆக்கிரமித்து வருகின்றனர்.
மூன்று மாவட்டங்களிலும் குறித்த பிரச்சினை தொடர்ந்துகொண்டு செல்கிறது அதிலும் நான் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் என்ற அடிப்படையில் மாவட்டம் முழுதும் இப்பிரச்சினைகள் மேலோங்கி வளர்கிறது என தெரிவித்தார். மேலும் அதிகமாக எனது சொந்த இடமான புல்மோட்டை கிராமத்தில் காணி பிரச்சினைகள் உக்கிரமடைந்து கொண்டே செல்கின்றது தங்களுடைய நால்லாட்சியின் கீழ் இவற்றை முடிவுக்கு கொண்டு வருவதனூடாகவே மாகாண மக்கள் சுதந்திரமாக வாழ வழி வகுக்கும் என கேட்டுக்கொண்டார்.
மாகாண சபை உறுப்பினர் அன்வரின் கேல்விகளுக்கு பிரதமர் பதில் அளிக்கையில்
வடக்கிலும் கிழக்கிலும் இருக்கும் பிரச்சினைகளை நான் நன்கு அறிவேன் இருந்தும் வடக்கில் படையினரிடமிருந்து அதிகமான காணிகள் மீள பெறப்பட்டு மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவ்வாறே கிழக்கிலுள்ள காணி பிரச்சினைகளுக்கு உடனடியாக கிழக்கு அபிவிருத்திக்கு பொறுப்பாக இருக்கின்ற பீல்மார்ஸல் அமைச்சர் சரத்பொன்சேகா பாதுகாப்புச் செயலாளர் கிழக்கு மாகாண ஆளுநர் ஆகியோரோடு கிழக்கு முதலமைச்சரும் இணைந்து அவசர ஏற்பாடுகளை செய்து காணிகளை விடுவிக்க தான் நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதியளித்தார்
மேலும் மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் கிழக்கில் வேலையற்றோர் அதிகமாக இருப்பதால் அவர்களுக்குரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென கேட்டதற்கினங்க
பிரதமர் பதிலளிக்கையில் வேலையற்ற பிரச்சினை அவசரமாக தீர்க்ககூடிய விடயம் அல்ல அதற்கான 05 வருட கால திட்ட வரைபொன்றை நாம் தயாரித்துள்ளோம் கிழக்கில் வேலையற்றோர் விகிதத்தை குறைக்காமல் அபிவிருத்தி செய்வதில் எந்த பயனும் இல்லை என்பதை நான் நன்றாக உணர்வேன் அதனால்தான் கிழக்கை நோக்கி கைத்தொழில் பேட்டைகள் மற்றும் சுற்றுலாத்துறை சார்ந்த வேலைத்திட்டம் மற்றும் ஏனைய பல அபிவிருத்தி திட்டங்களை செயற்படுத்த சிங்கப்பூர் அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளோம் என்று கூறினார்.
கிழக்கு மாகாணத்திலுள்ள அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ள விசேட நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ள தமக்கு வழங்குமாறு மாகாண சபை உறுப்பினர்கள் சார்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் கேட்டுகொண்டார்.
இதனை தொடர்ந்து முதல் அமைச்சரின் கேட்போர் கூட்டத்தில் நடை பெற்ற மாகாண சபை அமைச்சர்கள் உறுப்பினர்கள் அமைச்சின் செயலாளர்கள் திணைக்கள தலைவர்கள் மற்றும் மூன்று மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களும் கலந்துகொண்ட விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.
இதன்போது பிரதமர் விசேட உரையாற்றுகையில்:
திருகோணமலை இயற்கை துறைமுகம் மற்றும் இயற்கை வளங்கள் நிறைந்து காணப்படுவதாலும் அத்துடன் மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை போன்ற மூன்று மாவட்டங்களையும் இணைக்கும் அதிவேக நெடுஞ்சாலைகளை விமான நிலையம் மற்றும் சுற்றுலாத்துறை மீன் உற்பத்தி போன்ற துறையை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருவதோடு, தெற்கில் ஹம்பாந்தோட்டை தொடக்கம் வடக்கில் யாழ்பாணம் வரையான பகுதியை இணைக்கும் அதிவேக நெடுஞ்சாலையினூடாக அபிவிருத்தியை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
இவை அனைத்தையும் கருத்தில் கொண்டே கிழக்கு மாகாணத்திற்கான அவசர விஜயமொன்றினை மேற்கொண்டேன் என பிரதமர் தெரிவித்தார்.