எஸ்.எம்.சன்சீர்-
இன்று காலை ( 11,06,2016) இறக்காமம்-02 (வாங்காமம்-10ஏ) கிராம வளவு ஒன்றில் இருந்த மரம் ஒன்றை வெட்டிய போது அச்சமயம் வீதியில் பயணித்த முன்னால் இறக்காமம் பிரதேச சபை உறுப்பினர் முஸ்மியி அவர்களின் காரின் மேல் எதார்தமாக மரமும் மின்சார கம்பமும் வீழ்து விபத்துக்குள்ளாகியது.
அச்சமயம் காரில் பயனித்த அவரும் அவரது நண்பரும் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். அதேவேளை வீதியில் மோட்டார் சைக்கிளிள் வந்த மற்றுமொருவர் (10ஏ) கிராமத்தை சேர்ந்த பவுர்தின் என்பவர் சிறு காயத்துககுள்ளாகிய நிலையில் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பான மேலதிக விசாரனையை தமனை பொலீசார் மேற்க்கொண்டு வருகின்றனர்.