வட மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினரா என்கின்ற ஐயம் ஆளும் கட்சியினிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வட மாகாண சபையின் 55 ஆவது மாதாந்த அமர்வு நேற்று (03) நடைபெற்ற போது இச்சந்தேகம் ஏற்பட்டது. எதிர்கட்சி உறுப்பினரான தவநாதன் ஆளும்கட்சியின் செயற்பாடுகள் தொடர்பில் கருத்து வெளியிடும் போது இடையில் அதை மறித்து ஆளும்கட்சி உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் தனது கருத்தை முன்வைக்க முயன்றிருந்தார்.
இதனால் சபையின் சிறிது சலசலப்பு ஏற்பட்டதுடன் மற்றுமொரு ஆளும் கட்சி உறுப்பினர் விந்தன் கணகரட்னம் உறுப்பினர் அஸ்மீன் தமிழ் தேசிய கூட்டமைப்பினை சாராதவர்.எனவே கூட்டமைப்பு தொடர்பாக கருத்துக்களை முன்வைக்க முடியாது என கூறி அமர்ந்தார்.
இதனிடையே எழுந்த மற்றுமொரு ஆளுங்கட்சி உறுப்பினர் இமானுவேல் ஆனோல்ட் உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் குறித்து சக ஆளுங்கட்சி உறுப்பினர் கூறிய கருத்தை கன்சாட் அறிக்கையில் இருந்து அகற்ற வேண்டும் என அவைத்தலைவரிடம் கோரிக்கை விடுத்ததுடன் அஸ்மீன் அய்யூப் கூட்டமைப்பின் ஊடாகவே வடக்கு மாகாண சபைக்கு அவர் வந்தார் என கூறி அமர்ந்தார்.
அத்துடன் அவைத்தலைவரும் அதனை உறுதிப்படுத்தி அச்சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.