தெஹிவளை பாத்யா மாவத்தை பள்ளிவாசலுக்கு திங்கட்கிழமை இரவு வருகைதந்த பொலிஸார் விஸ்தரிப்பு பணிகளுக்கு தடைவிதித்ததுடன் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படுமெனவும் அச்சுறுத்தியுள்ள நிலையில் அங்கு பிரசன்னமாகியிருந்த கொழும்பு பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் செயலாளரும், R.R.T அமைப்பின் தலைவருமான சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் பொலிஸாரிடம் கருத்து வெளியிடுகையில்,
''இந்தப் பள்ளிவாசல் கட்டடத்தை நாம் விபச்சாரம் நடத்த விஸ்தரிக்கவில்லை. அல்லாஹ்வைத் தொழுவதற்காகவே விஸ்தரிக்கிறோம். பொலிஸார் உள்ளே சென்று தாராளமாகப் பார்வையிடலாம். நாம் விஸ்தரிப்பு பணிகளை தொடர்ந்து மேற்கொள்வோம். அதற்கான அனுமதியை தெஹிவளை, கல்கிசை மாநகர சபை முதல்வரிடமிருந்து பெற்றுக் கொண்டுள்ளோம்.
நீதிமன்றில் வழக்குத் தொடருங்கள். எம்மை விளக்கமறியலில் வையுங்கள். எங்களை எரியுங்கள். நாம் பயப்படப்போவதில்லை. நாம் ஒரு குற்றமும் செய்யவில்லை. நல்ல ஒரு காரியமே செய்கிறோம். நாம் நீதிக்காக சர்வதேசம் வரை செல்வோம். நாட்டின் சட்டத்தின்படி பள்ளிவாசல் கட்டுவதற்கு எமக்கு உரிமையுண்டு.
எமது உரிமைக்கு எவரும் சவால்விட்டால் பொலிஸார் தான் எமக்கு பாதுகாப்புத் தரவேண்டும்'' என்றார்.