மஹிந்தவை இரகசியமாக சந்தித்த சஜின் வாஸ்...!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன கடந்த 31ஆம் திகதி கொழும்பு ஹோர்டன் பிரதேச வீடொன்றில் மஹிந்தவை இரகசியமான முறையில் சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தன் மீதான குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பித்துக் கொள்ளும் நோக்கில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கைவிட்டு அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து கொண்டார்.

இந்த கலந்துரையாடலுக்காக மஹிந்த தரப்பை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தேயினால் அவரது வாகனத்தில் சஜினை மறைத்து அழைத்து வந்துள்ளார்.

மஹந்த ராஜபக்விடம் உள்ள பெருந்தொகை கறுப்பு பணம், தேர்தலுக்காக கிடைத்த நிதியென கூறுமாறும், அதற்கு சாட்சியாக சஜின் முன் வர வேண்டும் என்ற மஹிந்தவின் யோசனைக்கு அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் அதற்கான சில ஆவணங்களை மஹிந்தவினால் சஜினிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்த பின்னர் சஜின் வாஸ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அரசாங்கத்தின் சாட்சியாளராக மாறுவதாக வழங்கிய உறுதிமொழியை அடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.

எனினும் அவர் எந்த வழக்கிற்கு அரசாங்கத்தின் சாட்சியாளராக மாறினார் என இதுவரையில் தெரியவரவில்லை.

இந்த நிலையில் அவர் மஹிந்த ராஜபக்சவை இரகசியமாக சந்தித்திருப்பது அரசாங்கத்தை முட்டாளாக்கும் ஒரு நடவடிக்கை என கூறப்படுகின்றது.

சஜின் வாஸ் குணவர்த்தன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தீவிர விசுவாசி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -