நாச்சியாதீவு பர்வீன்
கடந்த சில நாட்களாக நாடாவில் ரீதியாக ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கில் மல்வானைப் பிரதேசமும் வெகுவாக பாதிக்கப்பட்டன. மல்வானையில் பல பிரதேசங்களில் போக்கு வருத்து முற்றாக துண்டிக்கப்பட்டும் இருந்தன. அந்தவகையில் இந்த வெள்ளத்தின் அகோரமான தாக்கத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மல்வானை ஆட்டா மாவத்தை பகுதி மிக முக்கியமானதாகும்.

ஆட்டா மாவத்தை பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மக்களை முதலாவது வந்த அரசியல் பிரமுகர் அமைச்சர் ரிசாத் பதியுதீன்,அதன்பின்னர் வந்த அரசியல் வாதி இஷாக் ரஹ்மான் எம்.பி. மாத்திரமே, ஆட்டா மாவத்தை மக்களின் வீடுகளுக்கு சென்று அவர்களின் குறைகளை கேட்டறிந்த இஷாக் ரஹ்மான் எம்.பி. அந்த பிரதேசத்திற்கு பொறுப்பான கிராம சேவகர்,உதவி அரசாங்க அதிபர் ஆகியோருடன் இந்த மக்களின் நிவாரணங்கள் தொடர்பில் பேசினார். பாதிக்கப்பட்ட சிங்கள முஸ்லிம் குடும்பங்களின் பயன்பாட்டிற்காக 100 நுளம்பு வளைகளை உடனடியாக பெற்றுக்கொடுத்ததோடு. ஆட்டா மாவத்தையில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் நூர் பள்ளிவாசலையும் பார்வையிட்டார்.
மல்வானை பிரதேசத்தில் புறக்கணிக்கப்பட்ட பிரதேசமாக இருந்த ஆட்டா மாவத்தை இப்போது ஊடகளின் அனுசரணையில் அவதானத்திற்குறிய பிரதேசமாக மாறியுள்ளது.