பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு இரண்டு சாரதிகள் வீதம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரச தரப்பு தகவல்கள் தெரிவிகின்றன.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வ வாகனம் வழங்கப்பட்டிருக்கும் அதேவேளை தற்போதைக்கு ஒரு சாரதி மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது.
என்றாலும் எதிர்காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு இரண்டு சாரதிகள் வீதம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த சலுகை அரசாங்க உறுப்பினர்களுக்கு மாத்திரமின்றி, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.