க.கிஷாந்தன்-
புதைக்கப்பட்ட சிசுவின் சடலத்தை தோண்டியெடுத்த பொலிஸார் , பின்னர் பெற்றோரிடமே சடலத்தை ஒப்படைத்த சம்பவம் தலவாக்கலை, மிடில்டன் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
இறந்த நிலையில் பிறந்த சிசுவை உறவினர்கள் வைத்தியசாலையில் ஒப்படைக்காது தமது வீட்டுக்கே எடுத்துச் சென்றுள்ளதுடன் சடலத்தை வீட்டின் பின்புறத்திலுள்ள தோட்டத்தில் புதைத்துள்ளனர்.
இது தொடர்பில் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து, தலவாக்கலை பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளதுடன் அங்கு புதைக்கப்பட்டிருந்த சிசுவின் சடலத்தை தோன்றியெடுத்து வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
சிசு இறந்தே பிறந்துள்ளது என வைத்திய பரிசோதனையில் தெரியவந்ததைத் தொடர்ந்து பொலிஸார் சடலத்தை மீண்டும் பெற்றோரிடமே ஒப்படைத்துள்ளனர்.