அரநாயக்க பகுதி பாரிய மண்சரிவிற்கு உள்ளாகி தற்போது அமைதியான நிலைக்கு திரும்பியுள்ள சந்தர்ப்பத்தில், மீண்டும் தற்போது அதிர்ச்சி சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
அதாவது 14 வயதுடைய சிறுமி ஒருவர் இரண்டு வார காலப்பகுதிக்குள், இரண்டு காதலர்களுடன் வீட்டை விட்டு சென்று, இருவர்களாலும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தால் அரநாயக்கா பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
குறித்த சிறுமியின் 16 மற்றும் 19 வயதான இரண்டு காதலர்களும் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
கடந்த மாதம் 22 ஆம் திகதி 16 வயது காதலனுடன் வீட்டை விட்டுச் சென்ற சிறுமி, எப்பாவல பிரதேசத்தில் மறைந்திருந்த போது அரநாயக்க பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதன் காரணமாக குறித்த 16 வயது சிறுவன் மே மாதம் 31 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சிறுமியை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்திய போது பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டது நிரூபிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு வாரத்திற்குள் முதல் காதலன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதை அடுத்து, இரண்டாவது காதலனுடன் குறித்த சிறுமி மீண்டும் வீட்டை விட்டுச் சென்றுள்ளார்.
இரண்டாவது காதலனான 19 வயது இளைஞனுடன் மீண்டும் வீட்டை விட்டுச் சென்ற குறித்த சிறுமி தபாரவ பிரதேசத்தில் மறைந்திருந்த போது அரநாயக்க பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதன்போது மீண்டும் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்திய வேளையில் இரண்டாவது காதலனாலும் குறித்த சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இரண்டாவது காதலனையும் கைது செய்து ஜூன் 7 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மாவனெல்ல நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சிறுமியின் இவ்வாறான செயற்பாடுகளால் குறித்த பகுதியிலுள்ள மக்கள் அதிர்ச்சியிலும், கோபத்துடனும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.