புனித நோன்பினை முன்னிட்டு பொறியியலாளர் அல்-ஹாஜ் ஷிப்லி பாரூக் விடுத்துள்ள அறிக்கை....!

அஹமட் இர்ஷாட்-
சாதரணமாக எமது வாழ் நாட்களில் நமக்கு ஹலாலாக்கப்பட்ட சில விடயங்களை பகல் காலங்களில் ஹறாமாக்கி அதை நாம் எவ்வாறு நடை முறையில் பின்பற்றிகிறோம் என்பதை அல்லாஹ் அவதானிக்கின்றான். அவைகள் புனித நோன்பு மாதத்தில் தடுக்கப்படிருப்பதானது நரக நெருப்பிலிருந்து எம்மை பாதுகாத்துக்கொள்ள இறைவன் எமக்கு அளித்திருக்கும் சிறந்த பலப்பரீட்ச்சையாகவே புனித ரமழான் மாதம் முஸ்லிம்களுக்கு அல்லாஹ்வினால் இவ்வுலகில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

அதனால் தீமையில் இருந்தும் எம்மை தடுத்துகொள்வதோடு நன்மையின் பக்கம் எம்மையும் எமது சமூகத்தினையும் ஒற்றுமைபடுத்தி கொள்வது முஸ்லிம்களாகிய எமது அனைவரினதும் கட்டாய கடமையாகும்.

அத்தோடு அருள் நிறைந்த மாதம், நன்மைகளை அதிகம் செய்யும் மாதம், பிழைப்பொறுப்புத் தேடும் மாதம், அல்லாஹ்வை அதிகம் நெருங்கும் வாய்ப்பைப் பெறும் மாதம், சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்பட்டு நரகத்தின் வாசல்கள் மூடப்படும் மாதம், சாத்தான்கள் விலங்கிடப்படும் மாதம், ஆயிரம் மாதங்களை விட சிறப்புமிக்க ஒரு இரவைக் கொண்ட மாதம், நரகவாதிகள் நரகத்திலிருந்து விடுதலை பெறும் மாதம், குர்ஆனை இப்பூவுலகத்தில் இறக்குவதற்கு அல்லாஹ் தேர்ந்தெடுத்த மாதம், துஆக்கள் அங்கீகரிக்கப்படும் மாதம் என இம்மாதத்திற்கு பல சிறப்புக்கள் காணப்படுகின்றன. 

ஆகவே அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான இம்மாதத்தில் புனித முப்பது நோன்புகளையும் எம்மை படைத்த இறைவனுக்காக நோற்பதோடு அண்மையில் எமது நாட்டிலே வெள்ள அணர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட எமது சகோதரர்களின் வாழ்க்கை நிலையான இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு நாங்கள் நோன்புகாலத்தில் விழித்திருந்து தொழுகைகளில் அவர்களுக்காக அல்லாஹ்விடம் வேண்டிக்கொள்வதுடன் கொள்வதுடன், 

அனேகமான முறையில் இப்புனித ரமழான் மாதத்தில் அதிகளவிலான ஸக்காத்துக்களையும், ஸதகாக்களையும் வழங்குமாறு எமக்கு போதிக்கப்பட்டுள்ளது என்ற வகையிலே அண்மையில் வெள்ள அணர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள எமது நாட்டு சகோதரர்களுக்கு இப்புனித நோன்பு காலத்தில் அல்லாஹ்வின் பெயரினால் வாரி வழங்குமாறு இந்நாட்டு முஸ்லிம்களை வேண்டிகொள்கின்றேன். 

மேலும் சிரியா, பாலஸ்தீன், ஆப்கானிஸ்தான், எகிப்து போன்ற நாடுகளில் வாழுகின்ற எமது சகோதர முஸ்லிம்களினதும் மற்றும் உலகில் எங்கெல்லாம் முஸ்லிம்கள் கலீமா கூறியமைக்காக துண்புறுத்தப்படுகின்றார்களோ அவர்களுடைய நிம்மதியான வாழ்க்கையாகவும், இந்த ரமழான் மாதத்தில் நிம்மதியான முறையில் நோன்புகளை நோற்று நோன்பு பெருநாளை கொண்டாட அவர்களுக்கு உதவி செய்யுமாறு இறைவனிடம் பிரார்த்திப்பது முஸ்லிம்களாகிய எமது அனைவரினதும் கடமை என்பதனை மக்கள் பிரதி நிதி என்ற வகையிலும் கலீமா கூறிய முஸ்லிம் என்ற வகையிலும் நான் உங்களிடத்தில் ஞாபகப்படுத்தி கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். 

அத்தோடு ரமழான் மாதத்தில் நாம் பெற்றுக்கொள்ள இருக்கின்ற பயிற்ச்சியினை ஏனைய பதினொரு மாதங்களிலும் எமது வாழ்க்கையில் எடுத்து நடப்பதற்கு எல்லாம் வல்ல இறை அருள் புறிய வேண்டும் எனவும் பிரார்த்திக்கின்றேன். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -