பெண்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வதை தடுக்க முடியாது என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரல கூறினார்.
விவசாயம், ஆடைக் கைத்தொழில் உள்ளிட்ட வருமானத் துறைகள் வீழ்ச்சியடைந்திருப்பதால் பெண்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வததை நிறுத்த முடியாதுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை வருமானம் ஈட்டும் பிரதான வழியாக வெளிநாடு செல்லும் தொழிலாளர்கள் காணப்படுவதாக அவர் பிபிசி உலக சேவைக்கு வழங்கிய செவ்வியில் கூறியுள்ளார்.
பெண்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வதற்கான வயதெல்லையை 21ஆக குறைப்பதற்கு அவர் முன்வைத்த அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி கிடைக்கவில்லை.
அது சம்பந்தமாக முறையான ஆய்வு ஒன்றை நடத்துவதற்கு ஜனாதிபதியினால் தான் உள்ளிட்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தலதா அதுகோரல கூறினார்.
பெண்கள் வெளிநாட்டு வேலைக்கு குறைந்த வயதில் செல்வதனூடாக குறைந்த வயதிலேயே பணம் சம்பாதிப்பதற்கு அவர்களுக்கு முடிவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரல கூறினார்.