விடுதலைப் புலிகளின் பதுங்கு குழி அருகில் வழமைக்கு மாறான செயற்பாடுகள் - பதற்றத்தில் மக்கள்

கிளிநொச்சி, இராமநாதபுரம் வட்டக்கச்சி பொலிஸ் நிலையத்தின் பின்பகுதியில் அமைந்துள்ள விடுதலை புலிகளின் பதுங்குக்குழிக்கு அருகில் வழமைக்கு மாறான செயற்பாடுகள் இடம்பெற்று வருவதால் அப்பகுதி மக்கள் பதற்றமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வியாழக்கிழமை (31) அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் பதுங்குக்குழிக்கு அருகில் சிறிய குழியொன்றினை தோண்டி தேடுதல் நடவடிக்கையொன்றில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து (01) அப்பகுதிக்கு 571 ஆம் படைப்பிரிவினைச் சேர்ந்த இராணுவ வீரரொருவர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்.

யுத்தம் நிறைவு பெற்ற பின்னர் குறித்த பகுதியில் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டிந்த நிலையில் கடந்த வருடம் குறித்த பாதுகாப்பு வேலி அகற்றப்பட்டது.

எவ்வாறாயினும் குறித்த பதுங்குக்குழி அமைந்திருக்கும் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (29) பயங்கரவாத புலனாய்வு பிரிவு மற்றும் பொலிஸார் அடங்கிய குழுவொன்று 2 மணித்தியால தேடுதல் நடடிக்கையொன்றினை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மீண்டும் புதன்கிழமை (01) குறித்த பிரதேசத்திற்கு பிரவேசித்த பயங்கரவாத புலனாய்வு பிரிவு மற்றும் பொலிஸார் குழியினைத் தோண்டிய இரண்டு நபர்களை தேடியுள்ளனர். 

குறித்த செயற்பாடுகளினால் அப்பகுதி மக்கள் பதற்றமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.வீ
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -