அட்டாளைச்சேனையில் இருந்து முதலமைச்சருக்கு வந்த கடிதம்...!

ட்டாளைச்சேனை பிரதேச சபையின் பதில் செயலாளரை நிரந்தரமாக்கித்தரும்படி பொதுமக்கள் முதலமைச்சரிடம் கோரிக்கை...

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பதில் செயலாளர் எல்.முகம்மது இர்பான் என்பவரை அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு நிரந்தர செயலாளராக நியமித்துத் தரும்படி கோரி கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட்டிடம் பொது மக்கள் கோரிக்கை விடுத்து கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளனர். 

குறித்த கடித்தில், 

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளராகக் கடமையாற்றிய க.புலேந்திரன் என்பவர் அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றுச் சென்றதன் பின்னர் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு, பொத்துவில் பிரதேச சபையின் செயலாளராகக் கடமையாற்றும் எல்.முகம்மது இர்பான் என்பவர் வாரத்தில் இரு நாட்களுக்கு பதில் செயலாளராகக் கடமையாற்ற நியமிக்கப்பட்டு கடமையில் ஈடுபட்டு வருகின்றார். 

இவர் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பதில் செயலாளராகக் கடமையேற்றது முதல் இப்பிரதேசத்தின் அபிவிருத்தி, அலுவலக நிருவாகம் மற்றும் இதர விடயங்கள் தொடர்பில் நன்கு திட்டமிட்டு நெறிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக, கடந்த பல வருட காலமாக சுகாதாரத்திற்கு ஒவ்வாத நிலையில் காணப்பட்ட அட்டாளைச்சேனை மீன் சந்தை, மாடு அறுக்கும் தொழுவம் என்பவற்றில் காணப்பட்ட சுகாதார சீர்கேடுகளை சுகாதார வைத்திய அதிகாரியின் ஆலோசனையுடன் சிறப்பாக சீராக்கம் செய்து மக்கள் மத்தியில் பெருவரவேற்பைப் பெற்றுள்ளதுடன், கடந்த காலங்களைப் போலல்லாமல் பொது மக்களால் பிரதேச சபைக்கு தெரிவிக்கப்பட்டு வருகின்ற முறைப்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தி உடனுக்குடன் அவற்றுக்கான தீர்வுகளையும் பெற்றுக்கொடுத்து வருகின்றார். 

மேற்படி செயலாளர் இர்பான் அவர்கள் பொத்துவில் பிரதேச சபையில் கடமையில் இருப்பினும், தொலைபேசி மூலம் அவரை இலகுவாக தொடர்பு கொண்டு எமக்கான தேவைகளை கடமையில் இயங்கிருக்கின்ற உத்தியோகத்தர்கள் மூலம் நிறைவேற்றிப் பெற்றுக் கொள்ளக்கூடிய வசதி வாய்ப்பையும் ஏற்படுத்தித் கொடுத்துள்ளார். 

எனவே மூவின மக்கள் வாழும் இப்பிரதேசத்தின் தேவைகளை அறிந்து சகல கிராமங்களின் அபிவிருத்தியிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்து செயலாற்றிவரும் இச்செயலாளரின் சேவையை அட்டாளைச்சேனை பிரதேசம் பூரணமாக பெற்றுக் கொள்ள எதிர்பார்த்து நிற்பதால், பதில் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பொத்துவில் பிரதேச சபையின் செயலாளர் எல்.முகம்மது இர்பான் என்பவரை அட்டாளைச்சேனை பிரதேச சபையின் நிரந்தர செயலாளராக நியமித்துத்தரும்படி கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட் அவர்களிடம் பொது மக்கள் கோரிக்கை விடுப்பதாக அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -