இலங்கையில் புதிய மூன்று சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. சமூகங்களுக்கு இடையில் நல்லுறவை ஏற்படுத்தவும் பயங்கரவாதம் மீண்டும் தோற்றம் பெறுவதை கட்டுப்படுத்தவும், இச்சட்டங்கள் நடைமுறைப் படுத்தப்படவுள்ளன.
பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியராச்சி இதனை தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் தேசிய பாதுகாப்பு சட்டம், அமைப்பு ரீதியான குற்றத்தடுப்பு தடுப்புச்சட்டம் மற்றும் புலனாய்வு சட்டம் என்பனவே அவையாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதில் தேசிய பாதுகாப்பு சட்டம் சாதாரண சட்டங்களை அடிப்படையாக கொண்டிருக்கும். அமைப்பு ரீதியான குற்றத்தடுப்பு சட்டம், பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு பதிலாக கொண்டு வரப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான நடவடிக்கை வரைபுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.