சஜின்வாஸுக்கு விளக்கமறியல் - கொழும்பு பிரதம நீதவான் உத்தரவு

ர்த்தகரொருவரிடம் பலவந்தமாக பணம் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சஜின்வாஸ் குணவர்தன விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

இதன் பிரகாரம், 60 கோடி ரூபா பண மோசடி செய்த குற்றச்சாட்டில் பண சலவை சட்டத்தின் கீழ் இன்று குற்றப்புலனாய்வு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்ட அவரை, எதிர்வரும் ஜூலை மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலபிடிய உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு, புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தின் முன்னர் இவரை ஆஜர்ப்படுத்தியபோது குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எனினும் பிரதிவாதி தரப்பில் ஆஜரான சட்டத்தரணி குறித்த குற்றச்சாட்டை நிராகரித்தார். 

விடயங்களை ஆராய்ந்த நீதவான் அடுத்த வழக்கு விசாரணையின் போது, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பணிப்பாளரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு பிறப்பித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -