றிஸ்லி-
ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ முகநூல் ஒரு மில்லியன் விருப்பு “like” களை தாண்டியுள்ளன.
இலங்கை அரசியல் வாதி ஒருவர் தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் ஒரு மில்லியன் Like ஐ பெற்றுக்கொண்டது இதுவே முதல் தடவை ஆகும்.
இன்று அதிகாலை 5:54 மணியளவில் ஜனாதிபதியின் முகநூல் பக்கம் ஒரு மில்லியனை தாண்டியதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
கடந்த 18 மாதங்களில் ஜனாதிபதியின் முகநூல் விருப்புக்கள் இந்த இலக்கை அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை இன்று அதிகாலை 5:54 மணியளவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ முகநூல் 999,254 Like களை பெற்றிருந்தது.
ஆனால் தற்போது ஜனாதிபதி மைத்திரியின் முகநூல் சாதனையை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.