அஸ்ரப் ஏ சமத்-
அடுத்த 5 ஆண்டுகளுக்குள் ஒரு புதிய இலக்கை நோக்கி இந்த நாட்டினையும் ஜ.தே.கட்சியையும் மாற்றியமைப்போம் புதிய இளைய தலைமுறையினா் ஜ.ரீ. கையடக்க தொலைபேசி மூலம் ஜ.தே.கட்சியில் இணைந்து கொள்ளுங்கள். ஜ. தே.கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தாா்.
இன்று (23)ஆம் திகதி சுபவேளையில் சிறிக்கொத்தவில் வைத்து ஜ.தே.கட்சியில் புதிய அங்கத்தவா் இணைந்து கொள்ளும் ஏ.ரீ.எம் இலக்ரோணிக் அடையாள அட்டைகளை வழங்கும்திட்டத்தினை ஆரம்பித்து வைத்ததுடன் புதிய அங்கத்தவா்களுக்கு இலக்ரோணிக் முறையிலான அடையாள அட்டையும் வழங்கி வைக்கப்பட்டது.
அங்கு உரையாற்றிய பிரதமா் ;

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவா்த்தன ஜ.தே.கட்சியின் தலைவராக இருந்த காலத்தில 1ருபா அங்கத்துவம் பெற்ற இருவா் மட்டுமே இங்கு உள்ளோம் நானும் அமைச்சா் ஜோன் அமரதுங்கவும் நாங்கள் நாடு பூராவும் சென்று அங்கத்துவா்களை எமது கட்சியில் இணைத்தோம். இனி எங்களது காலம் முடிவடைந்து வருகின்றது. எதிா்காலத்தில் இக் கட்சியை சுபீட்ச பாதையில் கொண்டு செல்ல தற்போதைய இளைஞா் சமுதாயம் முன் வருதல் வேண்டும் நீங்கள் இக் கட்சிக்குள் வந்து இந்த கட்சியின் செயற்பாடுகளி ஈடுபட்டு நாளை தலைவா்களாகி இந்த நாட்டினை மீள சிறந்த நாடாக கட்டியெழுப்ப முன்வருதல் வேண்டும்

அத்துடன் தற்கால யுகம் தொழில்நுட்ப ஜ.ரீ. யுகம் தத்தமது கையடக்க தொலைபேசி மூலமே தமது நீங்கள் அமுல்த்தி ஜ.தே.கட்சியில் படிவங்களை தொட்டு நிரப்பி சிறிக்கொத்தைக்கு அனுப்பிவிடலாம். எதிா்கலத்தில் 30 இலச்சம் பேரை ஜ. தே.கட்சியில் இணைத்துக் கொள்ளும் திட்டம் இன்றில் இருந்து ஆர் பிரேமதாசாவின் பிறந்த தினத்தில் முன்னெடுக்கப்படும். தற்போதைய யுகம் சோசியல் மீடியா யுகம், வெப் போன்றவற்றில் அடுத்த ஒரு இரு மாதங்களுக்குள் ஜ.தே.கட்சியின் நடவடிக்கை உலகமுழுவதிலும் பரவலாக்கப்படும்.
இந்த நாட்டில் ஜ.தே.கட்சி ஆட்சியிலேயே இலங்கையில் தொலைக்காட்சி ருபாவாஹினி, இனறநெட், கையடக்க தொலைபேசி, வை.பை, போன்ற சகல இலக்ரோணிக் யுகத்தினையும் அறிமுகப்படுத்தியது. எனவும் பிரதம மந்திரி தெரிவித்தாா். இந் நிகழ்வில் கட்சியின் செயலாளா் கபீா் காசீம் , தவிசாலாளா் மலிக் சமரவிக்கிரமவும் கலந்து கொண்டனா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -