குடிநீர் வசதியற்ற குடும்பத்தின் கோரிக்கைக்கு உடனடி நடவடிக்கை!
குடிநீர் இணைப்பு வசதியின்றி சிரமங்களை எதிர்கொண்ட மிகவும் தேவையுடைய பயனாளி ஒருவரின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில், கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் ஊடாக மனிதநேயமிக்க உதவித் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் குடிநீர் விநியோகத் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்பைப் பெற்றுக்கொள்வதற்காக குறித்த பயனாளி, கல்முனை ரஹ்மத் பவுண்டேஷனிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இக்கோரிக்கையை உடனடியாக ஏற்றுக்கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பொருளாளரும், கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வரும், ரஹ்மத் பவுண்டேஷனின் ஸ்தாபகரும் தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள், YWMA பேரவையின் ஏற்பாட்டில் குறுகிய காலத்திற்குள் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து, குறித்த பயனாளிக்கான குடிநீர் இணைப்பை ஏற்படுத்திக் கொடுத்தார்.
மேலும், பயனாளியின் இல்லத்திற்கு குடிநீர் இணைப்பு வசதியைப் பெற்றுக்கொடுத்ததன் மூலம் அக்குடும்பத்தின் அத்தியாவசியத் தேவையை நிறைவேற்றுவதில் பங்களிப்புச் செய்தார்.
இந்நிகழ்வில் ரஹ்மத் பவுண்டேஷன் உறுப்பினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் கிராம மக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
“மக்களின் அடிப்படைத் தேவைகளை அறிந்து, இயன்ற உதவிகளை உரிய நேரத்தில் வழங்குவதே உண்மையான சமூக சேவை” என்ற நோக்கில் செயற்பட்டு வரும் ரஹ்மத் பவுண்டேஷன், மக்களின் வாழ்வாதாரத்தையும் அடிப்படை வசதிகளையும் மேம்படுத்தும் பல்வேறு மனிதநேயப் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.
குடிநீர் என்பது மனித வாழ்வின் அடிப்படைத் தேவையாகும். அதனைப் பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்ளும் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவது சமூகத்தின் மீதான எமது கூட்டுப் பொறுப்பாகும்.
ரஹ்மத் பவுண்டேஷனின் மனிதநேயப் பணிகள் தொடரும்…!

0 comments :
Post a Comment