முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் 20 பில்லியன் அமெரிக்க டொலர் பணம் நாட்டுக்கு வெளியே கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
தகவல் அறியும் சட்டம் தொடர்பிலான நாடாளுமன்ற விவாதத்தில் போதே நேற்று அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
ஆட்சிக்கு வரும் முன்னதாக அளிக்கும் வாக்குறுதிகள் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் நிறைவேற்றப்படுவதில்லை. நாட்டை அபிவிருத்தி செய்ய 20 பில்லியன் டொலர் பணம் மஹிந்த காலத்தில் நாட்டை விட்டு வெளியே கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இதேவேளை, தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்திற்கு எதிர்ப்பை வெளியிடும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பற்றி நாம் வருந்துகின்றோம். சில அரசியல்வாதிகள் அரசாங்க காணிகளை குடும்பத்திற்காக அபகரித்துக்கொண்டனர்.
கடந்த அரசாங்க தலைவர்களுடன் ஒப்பீட்டு பா்க்கும் போது தற்போதைய தலைவர்களை போற்ற வேண்டும் எனவும், தற்போதைய அமைச்சர்களுக்கு எதிராக கறும்புள்ளிகள் எதுவும் கிடையாது எனவும் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.