ஏ.எம்.றிகாஸ்-
கிழக்குப்பல்கலைக் கழகத்தின் வெளிவாரிப் பட்டங்கள் மற்றும் கற்கைகள் நிலையம் தவிர்க்கமுடியாத காரணத்தினால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அறிவித்துள்ளார்.
எனினும் வெளிவாரிப் பரீட்சைகள் நாளை 11.06.2016 திகதி தொடக்கம் நடாத்தப்படவுள்ளதால் பரீட்சாத்திகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காலஅட்டவணையின் பிரகாரம் பரீட்சைக்குச் சமுகமளிக்குமாறு கேட்கப்பட்டுள்ளார்கள்.
இதேவேளை, கடந்த 4 மற்றும் 5 ஆந்திகதிகளில் நடத்தப்படவிருந்த பரீட்சைகள் நடத்தப்படவுள்ள திகதிகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படவுள்ளதாக பதிவாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.