எம்.ரி.எம்.யூனுஸ்-
புதிய காத்தான்குடியை பிறப்பிடமாகவும் லண்டன் மாநகரை வசிப்பிடமாகவும் கொண்ட 15 வயது மாணவி றீமா பாயிஸ் பத்தாயிரம் அடி உயரத்தில் பறக்கும் விமானத்திலிருந்து பரசூட் மூலம் குதித்து சாதனையை படைத்துள்ளார்.
Blue skies freefall club நடாத்திய குறியகாலப் பயிற்சியை சிறப்பாக நிறைவு செய்து பரசூட் மூலம் குதித்து சாதனையை ஆண்டில் வெளிப்படுத்திய ஒரேயொரு இலங்கையர் இவராவார்.
மொஹமட் பாயிஸ் பரீனா தம்பதிகளின் புதல்வியான றீமா பாயிஸ் லண்டன் Nova Hreod academy இல் தரம் பத்தில் கல்வி கற்று வருகிறார்.
அண்மையில் பாடசாலையில் நடைபெற்ற விஞ்சானப் பரீட்சையிலும் முதல் இடத்தைப் பெற்று விருது பெற்றமை குறிப்பிடத்தக்கது.