இன முறுகலைத் தவிர்ப்பதற்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் முக்கிய பங்கு...!

மகியங்கனை பிரதேசத்தில் நடந்த சம்பவமொன்றை தொடர்ந்து ஏற்படவிருந்த இன முறுகலைத் தவிர்ப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் முக்கிய பங்காற்றியுள்ளார். 

பங்கரகம்மன கிராமத்தைச் சேர்ந்த மௌலவி ஷேகுதீன் உடனடியாக இந்த விடயத்தை அமைச்சர் ரவூப் ஹக்கீமின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து, அவர் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவுடன் தொடர்புகொண்டு அப்பிரதேசத்தில் குறிப்பாக பங்கரகம்மன, ரோஹன, தம்பகொல்ல கிராமங்களில் பாதுகாப்பை பலப்படுத்துமாறும், நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்குமாறும் அடுத்தடுத்து இரண்டு நாட்களாக கூறியிருந்தார். அத்துடன் பதுளை பிரதி பொலிஸ் மா அதிபர், பதுளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோருடனும் அமைச்சர் ஹக்கீம் தொடர்பில் இருந்தார். 

அமைச்சரின் ஆலோசனைக்கமைவாக பொலிஸ் உயர் அதிகாரிகள் மேற்கொண்ட உரிய நடவடிக்கைகள், நிலைமை சுமுகமாவதற்கு பெரிதும் உதவியுள்ளதாக சவூதிஅரேபியாவின் ரியாத் நகரரிலிருந்து பங்கரமமையினைச் சேர்ந்த ஷேகுதீன் மௌலவி தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -