நாஸிறூன்-
இன்று 2016.05.31 செவ்வாய்க் கிழமை நிந்தவூர் மாவட்ட தொழிற்பயிற்சி நிலைய கேட்போர் கூடத்தில் சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினம் இடம் பெற்றது.
நிந்தவூர் சுகாதார வைத்திய அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி திருமதி Dr. தஸ்லிமா அமானுல்லாஹ் அவர்கள் தலைமை தாங்கியதோடு இந்நிகழ்விற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் பொது சுகாதார பரிசோதகர்கள் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் ஜனாப். மஜீட் நிந்தவூர் கமு/ அல்-அஷ்றக் தேசிய பாடசாலை அதிபர் ஜனாப் SMM. ஜாபிர் மற்றும் நிந்தவூர் மாவட்ட தொழிற்பயிற்சி நிலைய பதிகாரி ஜனாப் SA. நாஸர் மற்றும் பயிலுனர்கள் பாடசாலை மாணவர்கள் என அதிகமானோர் பங்கு பற்றினர்.
இன்றைய இந்த விழிப்புனர்வு நிகழ்வில் மாதிரி புகைத்தல் கொடும்பாவி எரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.