நுவரெலியா நகர மத்தியில் இ.தொ.கா வின் மே தின விழா - படங்கள்

க.கிஷாந்தன்-
லங்கை தொழிலாளர் காங்கிரஸின் மேதினக்கூட்டமும், பேரணியும் நுவரெலியா நகரில் இடம்பெற்றது.

இக்கூட்டம் நுவரெலியா நகர மத்தியில் 01.05.2016 அன்று இடம்பெற்றது.

நுவரெலியா நகர மத்தியில் ஆரம்பமான இ.தொ.காவின் மேதின பேரணியைத் தொடர்ந்து மேதினக்கூட்டம் நடைபெற்றது.

இ.தொ.கா.தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான முத்துசிவலிங்கம் மற்றும் பொது செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில், ஊவா மாகாண அமைச்சா் செந்தில் தொண்டமான், கட்சியின் மத்திய மாகாண சபை உறுப்பினா்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

அத்தோடு முன்னால் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.ராஜதுரை, தொழிலாளர் தேசிய சங்க முன்னால் தலைவர் டி.ஐயாதுரை, முன்னால் நுவரெலியா பிரதேச சபை தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் உறுப்பினருமான என்.சதாசிவன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவர் இளங்கோவன் ஆகியோர் உத்தியோகபூர்வமாக இலங்கை தொழிலாளர் காங்கிரசுடன் இணைந்து கொண்டனர்

இந்த மே தின கூட்டத்தில் பல மாவட்டங்களிலிருந்தும் சுமார் ஐயாயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடதக்கது.








எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -