வடமாகாண குடிநீர் பிரச்சினையை தீர்க்க முழுமையான செயற்திட்டம் – கிளிநொச்சியில் அமைச்சர் ஹக்கீம்

பாறுக் ஷிஹான்-
கர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவுப் ஹக்கீம் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட வடமாகாணத்திற்கான நீர் விநியோகம் தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொண்டுள்ளார்.

குறித்த கலந்துரையாடலில் வடமாகாணத்தில் நீர்வழங்கல் சம்பந்தமான திட்டங்கள் மற்றும் குறைபாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

இந்த கூட்டம் இன்று முற்பகல் 11.30 மணியளவில் ஆரம்பமானதுடன், இதில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவுப் ஹக்கீம், இராஜாங்க அமைச்சர் சுதர்ஷணி பெர்னாண்டோபுள்ளே , சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வடமாகாண அமைச்சர்கள் குருகுலராஜா, வடமாகாண சபை உறுப்பினர்கள், வடமாகாண அரசாங்க அதிபர்கள், இரணைமடு குளத்தின் பொறியியலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -