அஸ்ஹர் இப்றாஹிம்-
கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி பழைய மாணவர் சங்க செயலாளர் பொறியியலாளர் கமால் நிஸாத் அவர்களின் அழைப்பின் பேரில் அமெரிக்காவில் வதியும் இலங்கையைச் சேர்ந்த தனவந்தர் நஸீர் அஸீஸ் தம்பதியினர் மாளிகைக்காடு சபீனா வித்தியாலயம் , கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மற்றும் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயிலும் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு காலணிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.
மாளிகைக்காடு சபீனா வித்தியாலயஅதிபர் எம்.ஐ.எம்.அஸ்மி , கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி அதிபர் அமீரா லியாகத் அலி , கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் ,ஆகியோரின் தலைமையில் மேற்படி நிகழ்வுகள் இடம்பெற்றன.
அத்துடன் இந்நிகழ்வில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி பிரதி அதிபர்களான எம்.எஸ்.முஹம்மட், ஏ.பி.முஜீன் ,கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி பிரதி அதிபர்களான ஆர்.எம்.அஸ்மி காரியப்பர், பனூன் கரீம், ஸாஹிராக்கல்லூரி பாடசாலை அபிவிருத்தி சபை செயலாளர் நில அளவையாளர் எம்.ஏ.றபீக், மாளிகைக்காடு சபீனா வித்தியாலய பாடசாலை அபிவிருத்தி சபை செயலாளர் எம்.ஐ.எம்.அன்ஸார், மாளிகைகக்காடு பள்ளிவாசல் தலைவர் எம்.ஐ.ஸாகிர் ஹுசைன், கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி சிரேஸ்ட ஆசிரியர்களான எம்.ஐ.எம்.அஸ்ஹர், ஏ.எம்.அஜ்மீர். கல்லூரி ஒழுக்காற்று சபைத் தலைவர் யு.எல்.எம்.இப்றாஹிம், கல்லூரி ஆசிரியர் மன்ற செயலாளர் ஏ.எம்.ஹக்கீம், பகுதித் தலைவர் எம்.எஸ்.எம்.நுபைஸ் உள்ளிட்ட ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.