அக்கரைச்சேனை மக்தப் மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு...!

மூதூர் அக்கரைச்சேனை முஹைதீன் ஜும்மா பெரிய பள்ளி பரிபாலன சபையின் அனுசரனையோடு நடாத்தப்படுகின்ற மக்தப் மாணவர்களுக்கான முதலாம் வருட கற்கையை பூர்த்தி செய்த மாணவ, மாணவிகளுக்கான சான்றிதழ் வழங்குதலும், பரிசலிக்கின்ற வைபவமும் மக்தப் பாடசாலையின் அதிபர் M.இபாம் அவர்களின் நெறிப்படுத்தலுடன் அக்கரைச்சேனை முஹைதீன் ஜும்மா பெரிய பள்ளி வளாகத்தில் பள்ளி தலைவர் S.கஸ்ஸாலி தலைமையில் இடம்பெற்றது.

இவ்விழாவில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான அல்ஹாஜ் ஜே.எம்.லாகீர் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு பேசுகையில் எங்களது குழந்தைகளை இலங்கை முழுதும் ஒரே கல்வி திட்ட த்தினூடாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையினால் மக்தப் வகுப்புக்களை நடத்தி வருகின்றமை போற்றத்தக்க விடயமாகும்.இதனால் நாம் குழந்தைகளை ஒரு நேர்த்தியான பாடநெறியின் கீழ் குர்ஆன்,ஹதீஸ், இஸ்லாமிய ஒழுங்கு,அரபு மொழி போன்றவைகளின் தேர்ச்சியினை பெறுவதை சிலாகிக்க முடியாமல் இருப்பதாக குறிப்பிட்டார்.

மேலும் பேசுகையில் இந்த மகல்லாவில் கடந்த காலங்களில் உலமாக்களாக இருந்து மரணித்தவர்களையும்,இப்பள்ளி வாசலின் உருவாக்கத்திற்க்கு உழைத்து மரணித்த நிருவாகத்தினரையும் ,பொதுமக்களையும் நினைவு கூறி யதுடன் இவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் மேலான சுவர்க்கம் ஜன்னத்துல் பிர்தௌசை வழங்க வேண்டும் என்று கூறியதுடன் மக்தப் வளர்ச்சிக்காக இந்த மாவட்டத்தின் உறுப்பினர் என்ற வகையில் முழுமையான பங்களிப்பு செய்வதோடு பொதுமக்களாகிய நீங்களும் எல்லா வகையான பங்களிப்புகளை செய்வதனூடாகவே நம் பிள்ளைகளின் எதிர் காலச் சவால்களை சமாளிக்க முடியும் என்று குறிப்பிட்டார். 

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை தம் பணியை எல்லா துறைகளிலும் சேவை புரிந்து வருகின்றமையினால் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா மற்றும் நாட்டில் உள்ள எல்லா கிளைகளுக்கும் இதற்க்கு ஒத்தாசை புரிகின்ற அனைத்து நிறுவனங்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் துணை புரிய வேண்டும் என்று குறிப்பிட்டார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -