வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் தெரிவு விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன


என்.எம்.அப்துல்லாஹ்-

ன்று (16-05-2016) இடம்பெற்ற வடக்கு மாகாண கல்வி அமைச்சின் ஆலோசனைக்குழுக் கூட்டத்தில் வடக்கு மாகாணத்தில் இதுவரை தொண்டர் ஆசிரியர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டன. 

மேற்படி விபரங்கள் திருத்தங்களுக்காக அனைத்து வலயக் கல்விப் பணிமனைகளிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 

பெயர்கள் உள்வாங்கப்படாதவர்கள், அல்லது பெயர்களில் அல்லது கல்வித் தகைமைகளில் மாற்றங்கள் மேற்கொள்ள விரும்புவோர் தம்முடைய வலயக் கல்விப் பணிமனைகளை நாடுவதன் மூலம் அவற்றை மேற்கொள்ள முடியும். என்று வடக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ. அய்யூப் அஸ்மின் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். 

மேலும் முஸ்லிம் விண்ணப்பதாரர்கள் தொடர்பில் வினவியபோது வவுனியா தெற்கு கல்வி வலயத்தில் 45 தொண்டர் ஆசிரிய விண்ணப்பங்களும், மன்னார் கல்வி வலயத்தில் 36 தொண்டர் ஆசிரிய விண்ணப்பங்களும், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய கல்வி வலயங்களில் தலா 1 தொண்டர் ஆசிரிய விண்ணப்பமும், யாழ்ப்பாணம் கல்வி வலயத்தில் 2 தொண்டர் ஆசிரிய விண்ணப்பங்களுமாக 85 முஸ்லிம் தொண்டர் ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. 

வலயக் கல்விக் காரியாலயங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பெயர் பட்டியலில் இதுவரை தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றும் எவரேனும் இணைத்துக்கொள்ளப்படாவிட்டால் உரிய ஆவணங்களுடன் உடனடியாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரைத் தொடர்புகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டிருக்கின்றது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -