கல்முனை அஷ்ரஃப் வைத்தியசாலையின் தாதியர்கள் கௌரவிப்பு

ஹாசிப் யாஸீன், எம்.எம்.ஜபீர்-

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சர்வதேச தாதியர்கள் தின நிகழ்வுகள்இன்று (16) திங்கட்கிழமை வைத்தியசாலை கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது.

வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எப்.ஏ.றகுமான் தலைமையில்இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு சுகாதார, சுதேச வைத்தியத்துறை பிரதி அமைச்சர் பைசால் காசீம்பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர் ஆர்.ரவீந்திரன், பொது வைத்திய நிபுணர் எம்.கபீல், தரமுகாமைத்துவ பிரிவு வைத்தியர் எம்.சீ.எம்.மாஹிர் கண் வைத்தியர்எம்.எம்.ஏ.றிசாத், வைத்தியர் எம்.சீ.எ,\ம்.மாஹிர், சாய்ந்தமருது மாவட்ட வைத்திய அதிகாரிஜெஸீலுல் இலாஹி உள்ளிட்ட தாதியர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் என பலரும்கலந்து கொண்டனர்.

இதில் தாதியர்களின் மற்றும் மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது. மேலும் வைத்தியசலையில் சிறந்த தாதிய சேவைகளை வழங்கி தாதியர்கள் அதிதிகளினால்பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது பிரதி அமைச்சர்  பைசால் காசீம் சேவையினை பாராட்டி வைத்தியசாலைநிர்வாகத்தினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -