மட்டக்களப்பு பௌத்த பிக்குவின் பொறுப்பற்ற விடயத்தினை நான் வன்மையாக கண்டிக்கின்றேன் - ரம்ழான்

ட்டக்களப்பு மங்களராம விகாரையின் பௌத்த பிக்குவின் பொறுப்பற்ற விடயத்தினை நான் வன்மையாக கண்டிக்கின்றேன் என மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னால் உறுப்பினர் NK.ரம்ழான் தெரிவித்தார் 

அவர் மேலும் தெரிவிக்கையில் நேற்று அதாவது 26ம் திகதி மட்டக்களப்பு நகரில் பௌத்த விகாரையின் பிக்கு தலைமையில் கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பரத் தம்பிலா, பர மட்டையா என்ற கேவலமான வார்த்தை பிரயோகம் நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம்களின் உணர்வுகளையும் புண்படுத்தியுள்ளது இச்சம்பவத்தினை நாட்டில் சமாதானத்தை விரும்பும் எவரும் கண்டிக்காமல் இருக்க முடியாது.

ஒரு தனிப்பட்ட அரசியல் பிரதி நிதிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட குறித்த ஆர்ப்பாட்டம் இந்நாட்டில் வாழுகின்ற அனைத்து முஸ்லிம்களையும் கவலையடையச் செய்துள்ளது மட்டக்களப்பு மங்களராம விகாரையின் மதகுருவுக்கு தனிப்பட்ட வகையில் கிழக்கு முதலமைச்சர் மீது ஏற்பட்ட காழ்புணர்ச்சி மற்றும் குரோதம் காரணமாக மட்டக்களப்பிற்கு வெளியிலிருந்து பேரூந்துகளில் மக்களை அழைத்து வந்து மட்டக்களப்பு நகரத்தில் இந்த மாவட்டத்தின் இரண்டாவது பெரும்பான்மைச் சமூகமான முஸ்லிம்களுக்கு எதிராக பொறுப்பற்ற வகையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் தான் ஒரு இனவாதி என்பதை தெட்டத் தெளிவாக எடுத்துக் காட்டியிருக்கின்றது.

இந்த நாட்டு முஸ்லிம்கள் எந்தவொரு இனத்திற்கோ அல்லது எந்தவொரு படைப் பிரிவினருக்கோ எதிரானவர்கள் அல்லர் எப்போதும் சமாதானத்தை விரும்புகின்றவர்கள் இந்த நாட்டில் ஏற்பட்ட யுத்தப் பாதிப்பாக இருந்தாலும் சரி அல்லது எந்தவொரு அனர்த்த பாதிப்பாக இருந்தாலும் சரி அல்லது வேறு பிரச்சினையாக இருந்தாலும் சரி சாதி, மத, இன வேறுபாட்டுக்கு அப்பால் முதலில் முந்திக் கொண்டு தங்களது நேசக் கரத்தை நீட்டுபவர்கள் முஸ்லிம்களே. 

இவ்வாரான நட்பன்புகளால் வளர்க்கப்பட்ட இந்த நாட்டு முஸ்லிம்களின் மனதை புண்படுத்தும் வகையில் தனது இனவாதத்தை வெளிப்படையாக கக்கும் வெறிபிடித்த இவ்வாரான மதகுருக்கள் அவர்கள் அணிந்திருக்கும் அந்த காவியுடைக்கும் பௌத்த தர்மத்திற்கும் அருகதையற்றவர்கள்.

இவ்வாரான மத குருக்கள் இந்த நாட்டில் சமாதானத்திற்கு அச்சுறுத்தலானவர்கள் என்பதை இந்த நாட்டு பாதுகாப்பு படையினரும் அரசாங்கமும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அது மாத்திமின்றி இவ்வாரான தனிப்பட்ட தனது சொந்த விடயங்களுக்காக மக்களை பேரூந்துகளில் அழைத்து வந்து பிழையாக வழி நடாத்தும் பொறுப்பற்ற மதகுருக்களின் விடயத்தில் பௌத்த சாசன அமைச்சும் வழிப்பாக இருக்க வேண்டும்.

ஒரு அரசியல் பிரமுகர் ஒரு படை அதிகாரியை திட்டினார் அல்லது அச்சுருத்தினார் என்பதற்கு ஆள் திரட்டி ஆர்ப்பாட்டம் செய்யும் இந்த பௌத்த பிக்கு கடந்த காலத்தில் குடும்ப ஆட்சிக்கு துணை போகாத பாதுகாப்பு படை வீரர்களும் உயர் பாதுகாப்பு அதிகாரிகளும் பழி வாங்கப்படுகின்ற போது எங்கே இருந்தார் அதற்காக வாய் திறக்க வக்கத்த இந்த மதகுரு இன்று கிழக்கு முதலமைசருக்கு எதிராக வறிந்து கட்டிக் கொண்டு முழு முஸ்லிம்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் நடந்து கொள்வதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

அவ்வப்போது மட்டக்களப்பு மங்களராம விகாரையின் தேவைகளான சிந்தை (மைபூசுதல்) மற்றும் இன்னும் பல தேவைகளுக்கு உதவி கோரிய போதெல்லாம் சாதி, மத, இன வேறுபாடுகளுக்கு அப்பால் மனம் கோனாது உதவியர்கள் பரத் தம்பிலா என்னும் மட்டக்களப்பு முஸ்லிம் வர்த்தக சமூகமும் மற்றும் முஸ்லிம் அரசியல் தலைமைகளுமே என்பதை மட்டக்களப்பு மங்களராம விகாரையின் மதகுரு மறந்து விடக் கூடாது.

இவ்வாரான இன முரண்பாடுகளை தோற்றுவிக்கும் விடயங்களை மதகுருக்கள் தவிர்ந்து கொள்ள வேண்டும். மதங்களின் ஊடாக மக்களை நேர்வழிப்படுத்த வேண்டும் மதகுருக்கள் என்ற போர்வையில் இன்னும் மக்களை இனரீதியாக வழி நடாத்தக் கூடாது எனவும் தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -