இந்த அரசாங்கம் 48 பிக்குகளை சிறையில் அடைத்ததுடன் நின்றுவிடவில்லை. பௌத்த தர்மத்தை போதனை செய்யும் சிறந்த போதகர்களையும் சிறைப்பிடித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மீரிகம ஸ்ரீ முனின்னாராம விகாரையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அரசாங்கம் எங்களைப் பழிவாங்க வேண்டுமானால் பழிவாங்கட்டும். அதேபோன்று மக்களுக்கும் உதவிகளை வழங்க வேண்டும். இங்கு பழிவாங்கல் மட்டுமே இடம்பெறுகின்றது.
இன்று அரச சார்பற்ற நிறுவனங்கள் எமது கலாசாரத்தை சீரழித்து வருகின்றது. உடவே தம்மாலோக தேரர் சிறந்த சமயப் போதகர். அவரையும் இந்த அரசாங்கம் சிறையில் போட்டுள்ளது.
இன்று பெரஹரா நடாத்துவதற்கும் யானைகள் இல்லை. உள்ள அனைத்து யானைகளையும் நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றுள்ளது அரசாங்கம் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.