இக்பால் அலி
பொல்கஹவலையில் மேம்பாலமம் ஆரம்பிப்பதற்காக பிரதேச செயலகம் மற்றும் குருநாகல் எனப் பல இடங்களில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் பொல்கஹவல புகையிரத மேம் பாலப் பணிக்காக இந்நகரிலுள்ள பள்ளிவாசல் ஒன்று அகற்றப்பட வேண்டும் என்று அதிகாரிகள் கோரிக்கை முன்வைத்தனர்.
இது தொடர்பாக அனைத்து பொல்கஹவெல ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாகிகளும் இணைந்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர். வெள்ளிக்கிழமை தினம் பிரதேசத்திலுள்ள அனைத்து மக்களும் இதில் கலந்து கொண்டனர். இந்த மேம்பாலத்தினுடைய அபிவிருத்திப் பணிக்காக பள்ளிவாசலுடைய முழுக் கட்டிடங்களும் உடைக்கப்பட்டாலும் பருவாயில்லை. அதனை நாம் எதிர்க்கப் போவதில்லை.
தம் நகரின் அபிவிருத்திப் பணிக்காக வழங்கத் தயாராகவுள்ளோம் என்று பள்ளிவாசல்களின் தலைவர்கள் உட்பட ஊர் மக்கள் ஏகமானதாக தீர்மானம் எடுத்தனர். எனினும் முஸ்லிம்களுடைய மார்க்க பள்ளிவாசலை அகற்றக் கூடாது அது அவர்களுடைய புனிதமான இடம் என்று இப்பிராந்தியத்திலுள்ள ஐக்கிய தேசியக் கட்சி சிங்கள அரசியல்வாதிகள் அறிக்கைகளை சமர்ப்பித்து இப்பள்ளிவாசல் உரிய இடத்தல் இருக்கும் வேண்டும் என்ற வகையில் மேம்பாலத்தை நிர்மாணிப்பதற்காக திட்டமிட்டப்பட்டுள்ளார்கள. இதுதான் இன்றைய நல்லாட்சிக்குரிய அடையாளமாகும்.
இதையிட்டு நான் மிகவும் பெருமிதம் அடைவதோடு அவர்களுக்கு இந்த சந்தர்ப்பத்தில் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று வடமேல் மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷா தெரிவித்தார்.
பொல்கஹவெல புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள புகையிரதக் கடவையில் 2279 மில்லியன் ரூபா செலவில் ஸ்பெயின் நாட்டின் நிதி உதவின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ள மேம்பாலத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று 11-04-2016 நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட வடமேல் மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷா இவ்வாறு இதனைத் தெரிவித்தார். இந்நிகழ்வில் பிரதம அதிதியாக உயர் கல்வி நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல கலந்து கொண்டு சிறப்பித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்;
பொல்கஹவல புகையிரச் சந்தியில் நிர்மாணிக்கப்படவுள்ள பாலத்திற்கு இன்று அடிகல் நாட்டப்பட இருப்பதாக நான் என் நண்பர்களிடம் கூறிய போது அவர்கள் சிரித்தார்கள். நான் சிரிக்கின்றீர்கள் என வினவிய போது இதற்காக பல விடுத்தம் கடந்த அரசாங்கத்தில் அடிக்கல் நாட்டப்பட்டதாக என்று என்னிடம் கூறினார்கள். மக்கள் இவ்வாறு அடிக்கல் நாட்டுவதை நம்பிக்கை கொள்வதில்லை. நான் அறிந்த வரையிலும் மூன்று விடுத்தம் இந்த மேம்பாலத்திற்காக அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
அவர்கள் அப்போது அடிக்கல் நாட்டும் போது இதற்காக எங்கு இருந்து முதலீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்று இங்குள்ள அரசியல் பிரமுகர்கள் கேள்வி எழுப்பினார்கள். எந்த அடிப்படையில் இதற்காக நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என நாங்கள் எல்லோரும் வினவினோம். பதில் ஒன்றும் கிடைக்க வில்லை. அடிக்கல் மட்டும் தான் வைத்தார்கள்.
.
எதிர் வரும் புது வருடத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள மேம் பாலத்தினால் எல்லோரும் பயணம் செல்ல முடியும் என்று எங்களுக்கொரு நம்பிக்கை இருக்கிறது. கடந்த அரசாங்கத்தில் பல அபிவிருத்திப் பணிகள் இடம்பெற்றன. மேம்பாலங்கள், பாதைகள் நிர்மாணிக்கப்பட்டன. ஆனால் பொல்கஹவல தேர்தல் தொகுதியில் எதுவும் நடைபெறவில்லை.
இந்த வேலைத் திட்டத்திற்காக சீனா நாட்டிலிருந்து கடன் பெற்றார்கள். நூற்றுக்கு எட்டு விகிதம் கடனைப் பெற்று பாதைகள், மேம்பாலங்கள் செய்தார்கள். ஏன் மிகவும் பின்தங்கிய மக்கள் வாழும் பொல்கஹவெல பிரதேசத்திலுள்ள மேம்பாலம் நிர்மாணிப்பதற்கு முன்வருவரவில்லை. 24 மத்தியாலத்தியத்தில் 8 மணித்தியாலயம் இந்தப் புகையிரதக் கடவை புகையிரதச் சேவைக்காக முடப்படுகின்றன.
தேசிய வேலைத் திட்டத்தின் முக்கிய தேவையாக இந்த மேம்பாலத்தை கடந்த அரசாங்கம் ஏன் செய்ய வில்லை. எமது பிரதமர் ரனில் விக்கிரமசிங்க தேர்தலின் போது பொலகஹவெல மக்களுக்காக வாக்குறுதியொன்றை வழங்கியிருந்தார்.
அவ்வாறு வழங்கினாலும் அவருக்கு ஒரு வருடம் ஏன் தாமதம் ஏற்ப்பட்டது. கடந்த மஹிந்தவின் ஆட்சியில் வேலைத் திட்டத்திற்காக சீன நாட்டிலிருந்து நூற்றுக்கு எட்டு விகிதம் வட்டிக்கு ஈடு வைத்து கடனைப் பெற்றார்கள். ஆனால் நல்லாட்சியின் செயற் திட்டத்தின் பிரகாரம் ஸ்பெயின் நாட்டுடன் ஒப்பந்தம் செய்து குறைந்த வட்டிக்கு 40 வருடத் தவணை முறையில் கடனைப் பெற்று இந்த மேம்பாலம் வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த மேம்பாலம் அபிவிருத்தி செய்யப்படுவதோடு இந்த நகரமும் அபிவிருத்தி செய்வதற்காக இப்பகுதி ஐக்கிய தேசியக் கட்சி தேர்தல் தொகுதி அமைப்பாளருடன் கலந்துரையாடி அவர்களுடைய ஆதரவுடன் அமைச்சர் ரவுப் ஹக்கிமையும் அழைத்து வந்து எதிர் வரும் புது வருடத்துடன் இந்நகரை அபிவிருத்தி செய்யவுள்ளோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்
