முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்ததன் பின்னர் அவர் தங்காலையில் உள்ள அவரது இல்லத்திற்கு செல்வதற்காக இரண்டு ஹெலிகொப்டர்களை தாம் வழங்கியதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மேலும், பாதுகாப்பிற்கு மஹிந்த ராஜபக்ச விரும்பிய இராணுவ அதிகாரிகளை அழைத்துச் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உலகில் வேறு எந்தவொரு அரச தலைவருக்கும் இவ்வாறான பாதுகாப்பு அளிக்கப்படவில்லை எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் முன்னாள் ஜனாதிபதி தனக்கு வழங்கப்பட்ட இராணுவ பாதுகாப்பினை அரசியல் தேவைக்காக பயன்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூட தனது பாதுகாப்பிற்காக இராணுவத்தை பயன்படுத்துவது இல்லை எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.
