நச்சுத் தன்மையற்ற மற்றும் உடலுக்கு தீங்கிழைக்காத உணவுகளை நாட்டு மக்களுக்கு வழங்குவோம் என அனைத்து விவசாயிகளும் ஜயஸ்ரீ மகாபோதியின் முன்பாக சத்தியப் பிரகடனம் மேற்கொள்ள வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனைத்து விவசாய சமூகத்தினரிடமும் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
அனுராதபுரத்தில் 49 வது முறையாக இடம்பெற்ற, அறுவடை மற்றும் முதல் தொகை நெல்லை விகாரைக்கு கையளிக்கும் சமய நிகழ்வில் கலந்து கொண்டபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
நச்சுத் தன்மை மற்றும் ஒவ்வாத உணவுப் பண்டங்களை பாவனையிலிருந்து தவிர்க்கும் வகையிலான அரசாங்கத்தின் செயற்பாடு பற்றி குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
எந்தவித குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட போதும், அரசாங்கம் தமது பணிகளை முன்னெடுக்கும் என ஜனாதிபதி உறுதியளித்தார்.
இந்தநிலையில், இந்தமுறை சமய வழிபாடுகளின் போது, ரசாயன உர பயன்பாடற்ற, பாரம்பரிய முறையில் விளைவிக்கப்பட்ட நெல் அடங்கிய பாத்திரம் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
