பீல்ட் மார்சல் மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா, கடந்த அமைச்சரவைக் கூட்டத்தின்போது ஜனாதிபதியின் கண்ணியமான அதட்டலுக்கு உட்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது அமைச்சுக்கு 35 மில்லியன் ரூபாய்களே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த சரத் பொன்சேகா, ஒரு பென்ஸ் வாகனத்தை கொள்வனவு செய்ய 40 மில்லியன் ரூபாய்கள் தேவை.
இந்தநிலையில் தமது அமைச்சுக்கு ஒதுக்கியுள்ள பணத்தை பார்த்தால் இன்னும் 5 மில்லியன் ரூபாய்கள் பென்ஸ் வாகனத்தை கொள்வனவு செய்ய தேவைப்படும் என்று தெரிவித்தார். இதற்கு பதிலளித்த ஜனாதிபதி, குறித்த கோரிக்கையை பின்னர் ஆராயலாம் என்று குறிப்பிட்டார்.
நல்லாட்சியில் பென்ஸ் வாகனங்களை கொண்டு மக்கள் காப்பாற்ற முடியாது.
நாடு இன்று பொருளதார சிக்கலை எதிர்கொண்டுள்ளனது. இந்தநிலையில் அமைச்சர்கள் தமது ஆசனப்பட்டிகளை நிலத்திலும் வானத்திலும் இறுக்கிக்கட்டிக் கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
