நிந்தவூரில் வாகன விபத்து : ஒருவர் பலி - சாரதி தப்பியோட்டம்

சுலைமான் றாபி-

நிந்தவூர் பிரதான வீதியில் இன்று (19) இடம்பெற்ற வாகனவிபத்தில் ஆலிம் வீதி, மாளிகைக்காடு மத்தியைத் சேர்ந்த ஏ.ஆர்.றமீஸ் (27) என்பவர் பலியாகியுள்ளார். குறித்த விபத்துச் சம்பவத்தில் உயிரிழந்த நபர் தனது JK 5360 மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து கொண்டிருந்த வேளை பிறிதொரு மோட்டார் சைக்கிள் வந்த நபரினால் விபத்துக்குள்ளாக்கப்பட்ட வேளையிலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுக்கிறது.

மேலும் இந்த விபத்து சம்பவத்தில் விபத்தினை ஏற்படுத்திவிட்டு பிறிதொரு மோட்டார் சைக்கிள் வந்த சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளார்.

இதே வேளை இந்த விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -