எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்
வாழைச்சேனை பிரதேசத்தில் ஆரம்ப கல்வி பாடசாலைகளின் தேவைகள் அதிகமாக காணப்படுகிறது. அதனை நிபர்த்தி செய்யும் பொருட்டாக 1996ம் ஆண்டு வை.அகமட் பாடசாலை உதயமாகியது.
இன்று இப் பாடசாலையில் 700 மாணவர்கள் கல்வி கற்கின்றார்கள். இப் பாடசாலையில் 3 மாடி கட்டிடம்மொன்றின் தேவை மிக நீண்ட காலம் தொட்டு இருந்து வந்தது கடந்த வருடம் பாடசாலை நிருவாகத்தினர் அழைப்பின் பெயரில் பரிசளிப்பு விழாவிற்கு வருகை தந்த கெளரவ முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அகமட் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
பாடசாலை நிருவாகத்தினர் முதலமைச்சர் அவர்களிடம் தங்களது பாடசாலைக்கு 3 மாடி கட்டிடம் ஒன்றின் தேவை என உணர்த்தினார்கள் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கடந்த வருடம் 60 லட்சமும் இந்த வருடம் 90 லட்சமும் மொத்தமாக 1 கோடி 50 லட்சம் மாகாண நிதியிலிருந்து முதலமைச்சர் ஒதுக்கீடு செய்துள்ளார். என்ற மகிழ்ச்சியான செய்தி வாழைச்சேனை கல்வி சமூகம் மிகுந்த ஆவலுடன் தங்களுடைய நன்றிகளை முதல்வருக்கு தெரிவித்துக் கொள்கின்றார்கள்.
குறிப்பாக பாடசாலை அதிபர் அல்ஹாஜ் என்.எம். கஸ்ஸாலி அவர்கள் தனது நன்றியினை முதல்வர் நஸீர் அகமட் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றார். அத்துடன் வலயக்கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ் சேகு அலி அவர்களுக்கும் நன்றி உரித்தாகட்டும் மேலும் புத்திஜீவிகள், ஆசிரியர்கள் அனைவரும் தங்களது நன்றிகளை மேலும் மேலும் தெரிவித்துக் கொள்கின்றார்கள்.
வை.அகமட் பாடசாலை முதலாம் கட்ட கட்டுமான வேலைகள் சிறப்பான முறையில் தற்போது இடம் பெற்று வருகின்றது. புதிதாக கட்டப்படும் இக்கட்டிட்தின் கீழ் பகுதி மிக பிரமாண்டமான ஆரம்ப கல்வி பாடசாலையில் ஆராதனை மண்டபமாக இப்பகுதியில் திகழும் என்பது குறிப்பிடத்தக்கது.