வடமேல் மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவரை அமைச்சரவையிலிருந்து நீக்குவதற்கு அல்லது தற்பொழுது வகித்துவரும் பதவியிலிருந்து நீக்குவதற்கு அரசின் உயர்மட்டம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த அமைச்சர் மற்றுமொரு அமைச்சருடன் தொடர்ந்து ஏற்படுத்திக்கொண்ட முறுகல் நிலையே இந்த தீர்மானத்திற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் குறித்த அமைச்சர் நல்லாட்சி அரசாங்கத்தின் கொள்கைகளை புறக்கணித்து, அதனை விமர்சனம் செய்து வருவதும் இந்த தீர்மானத்திற்கு காணரமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் மே மாதம் இடம்பெறவுள்ள அமைச்சரவை மாற்றங்களில் போது இந்த தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
